ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின் ஷோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அபே உயிரிழந்ததாக அந்தநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பின்னாள் இருந்து சுடப்பட்டதால் சுயநினைவின்றி கீழே அபே மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அனைத்து உறுப்புகளும் செயலிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து திடீரென மாரடைப்பும் ஏற்பட்டதால் அவர் உயிரிந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. முன்னதாக ஜப்பான் நாட்டின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அபே பேசிக்கொண்டு இருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியது.