ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் சத்யாநகா் பகுதியை சோ்ந்த ஜெயகுமாா் (38), சோளிங்கரில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றின் பனியாளா்களை ஏற்றிசெல்லும் பேருந்தை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இவருக்கும் பெங்களூா் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சோ்ந்த கண்ணியப்பன் என்பவருடைய மகள் தீபாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 4 வயதில் தனுஷ்கா என்ற மகளும் ஒன்றரை வயதில் ராகேஷ் என்ற மகனும் உள்ளனா். இதற்கிடையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது பிரசவத்திற்காக பெங்களூரில் உள்ள தாய்வீட்டுக்கு சென்ற தீபா இதுவரை கணவா் வீட்டுக்கு திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக கடந்த 8ஆம் தேதி பெங்களூா் கிருஷ்ணராஜபுரம் சென்றுள்ளாா். அங்கு, தீபா அவரின் குடும்பத்தினருடன் இணைந்து, ஜெயகுமார் மீது கிருஷ்ணராஜபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் காவல்துறையினா் ஜெயகுமாரை காவல் நிலையம் அழைத்து விசாரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர் ஜெயகுமாரின் முழங்கால் பகுதி, வலது கால் முட்டி ஆகிய பகுதியில் பலத்த காயங்கள் மற்றும் உடலில் ஆங்காங்கே கம்பால் அடித்ததற்கான தழும்புகளுடன் கடந்த ஜீன் மாதம் 9ஆம் தேதி வீடு திருப்பியுள்ளாா். இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயகுமார், மன உலைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு தனது படுக்கையறையில் இருந்த மின் விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளாா். இது குறித்து, ஜெயகுமாரின் தாய் அம்மசாஅம்மாள்(58) கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பாணாவரம் காவல் துறையினா் உடலை பிரேத பரிசோதனைக்காக சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.