day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஏப்ரல் 28-ல் ‘பொன்னியின் செல்வன் பாகம் 2′ ரிலீஸ் : படக்குழு அறிவிப்பு

ஏப்ரல் 28-ல் ‘பொன்னியின் செல்வன் பாகம் 2′ ரிலீஸ் : படக்குழு அறிவிப்பு

சென்னை: எதிர்வரும் 2023, ஏப்ரல் 28-ம் தேதி அன்று பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வெள்ளித்திரையில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு. இதனை அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது. அது குறித்து சில நொடிகள் மட்டுமே ஸ்ட்ரீம் ஆகும் வீடியோ ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளது. முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 அன்று வெளியானது. இந்தச் சூழலில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது.முதல் பாகம் சுமார் 500 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக தகவல். முதல் பாகத்தை காட்டிலும் கூடுதலாக இரண்டாம் பாகம் வசூலில் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான், லால் முதலானவர்கள் இதில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!