பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானி இன்று 95-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தொிவித்தார். அவருடன் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உடன் சென்றார். மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை மத்திரி அமித்ஷாவும், அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினர். பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா டுவிட்டரிலும் பிறந்தநாள் வாழ்த்தை தொிவித்தார். முன்னதாக, பிரதமர் மோடியை அத்வானியின் மகள் பிரதிபா வரவேற்றார்.