சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த பெரும் சரிவையடுத்து, பாகிஸ்தான் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். இதையடுத்து, பெட்ரோல் லிட்டருக்கு 18 ரூபாய் 50 காசுகளும், டீசல் லிட்டருக்கு 40 ரூபாய் 54 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அந்த நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.