day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இளைஞர்களை காதல் தோல்வியில் இருந்து மீட்க புதிய பிரசாரம் : நியூசிலாந்து அரசு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

இளைஞர்களை காதல் தோல்வியில் இருந்து மீட்க புதிய பிரசாரம் : நியூசிலாந்து அரசு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

நியூசிலாந்து : காதலில் தோல்வி அடைபவர்கள் சோகம், மன வருத்தம், தாழ்வு மனப்பான்மை, தனிமை போன்றவற்றால் சில நேரங்களில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. ஏழை, நடுத்தர நாடுகள் மட்டுமின்றி, வளர்ந்த நாடுகளில் ஒன்றான நியூசிலாந்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் அதனை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

காதல் தோல்வியில் சிக்கி அவதிப்படும் இளம் தலைமுறையினரை மீட்க நியூசிலாந்து அரசு புதிய முயற்சியாக
‘லவ் பெட்டர்’ என்ற பிரசாரத்தை அரசு தொடங்கி உள்ளது. இதற்காக 3 ஆண்டுகளில் இந்திய மதிப்பில் சுமார் 33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த பிரசாரத்தில் பலரும் தங்களது காதல் தோல்வியின் நிஜ அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் தங்களின் உணர்வுகளை ஆரோக்கியமாக மாற்ற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரசாரத்தை தொடங்கி வைத்த நியூசிலாந்து நாட்டின் சமூக மேம்பாட்டு இணை அமைச்சர் பிரியங்கா ராதாகிருஷ்ணன் கூறுகையில்:- தனக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்காமல் ஒரு வழி இருப்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ளவும், அவர்களின் காயங்களை சமாளிக்கவும் அரசு விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!