கொல்கத்தா : மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவில் இருந்து ஹவுராவுக்கு மெட்ரோ ரெயில் இயக்குவதற்காக ஹூக்ளி ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் ஒரு ஆற்றின் கீழே சுரங்கப்பாதை அமைத்து மெட்ரோ ரெயில் இயக்குவது இதுவே முதல் முறை. அந்த வகையில் கொல்கத்தா மெட்ரோ ரெயில் சேவை நேற்று புதிய சரித்திரம் படைத்துள்ளது. கொல்கத்தாவின் மகாகரன் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஹவுரா மைதான மெட்ரோ ரெயில் நிலையம் வரையில் இந்த சுரங்கப்பாதையில் நேற்று மெட்ரோ ரெயில் வெள்ளோட்டம் விடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.