டெல்லி மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், இந்தியா முழுவதும் உள்ள 15 மாநிலங்களைச் சேர்ந்த 51 உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ளது. இத்துடன், தமிழகத்தைச் சேர்ந்த 18 உறுப்பினர்களில் திமுகவை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அதிமுகவை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் இந்த மாத 29ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே ஏற்கனவே காலியாக உள்ள 51 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுடன் தமிழகத்தின் 6 உறுப்பினர்களுக்கும் சேர்த்து மொத்தம் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகளுக்கும் வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடக்க இருப்பதாக கடந்த மாதம் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் திமுக கட்சி சார்பில் சு.கல்யாணசுந்தரம், கிரிராஜன், ராஜேஷ்குமார் ஆகியோரும், அதிமுக கட்சி சார்பில் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் மற்றும் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேவேளையில் இந்தியா முழுவதும் உள்ள தமிழகத்துடன் 11 மாநிலங்களை சேர்ந்த 41 மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்த நிலையில், மகாராஷ்டிராவில், ராஜஸ்தானில், ஹரியானாவில், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒன்றுக்கும் அதிகமானோர் ஒரு பதவிக்கு போட்டியிட்டுள்ளதால் அந்த மாநிலங்களில் நேற்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைப்பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டு இரவு வெளியிடப்பட்ட முடிவில் ராஜஸ்தான் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடந்த 4 இடங்களில் 3ல் காங்கிரஸ் கட்சியும், 1 இடத்தில் பாஜக கட்சியை சேர்ந்த வேட்பாளரும் வெற்றிப்பெற்றனர். மாகராஷ்டிரா மற்றும் ஹர்யானா மாநிலங்களில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிருந்ததால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். இதனால், மகாராஷ்டிராவில் 6 இடங்களிலும் ஹரியானாவில் 2 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்திடமிருந்து உத்தரவு வரும்வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறாது என அறிவித்துள்ளது.