கேரளாவில் ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில், மன்னன் மஹாபலி நாட்டு மக்களை காணவரும்போது அவரை வரவேற்கும் விதமாக, மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் திருநாளை ஆண்டாண்டு காலமாக உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். பத்துநாள் கொண்டாட்டத்தின் நிறைவு நாளான இன்று இருபாலரும் வீட்டு வாயில்களில் வண்ணவண்ணப் பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை உடுத்தி, குடும்பத்தினருடன் கூடி அறுசுவை உணவு உண்டு, ஆடல், பாடல், விளையாட்டு என விழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். மேலும், இதில் கேரளாவில் உள்ள மக்கள் மட்டும் இல்லாமல் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்கள் திருவோணத்தை குதூகலமாக கழித்து வருகின்றனர்.