நடிகர் விஜய் புலி திரைப்படத்திற்கு பெற்ற ரூ.1.5 கோடி வருமானத்தை கணக்கில் காட்டாமல் வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக, ரூ1.5 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், இதுதொடர்பாக வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.