கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஸ்ரீ வராகம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அனூப். இவர், கேரள மாநில அரசின் திருவோண பண்டிகை லாட்டரி சீட்டை நேற்று முன்தினம் ரூ.500 கொடுத்து வாங்கியுள்ளார். இதற்காக, 450 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில், மகனின் உண்டியலில் இருந்து 50 ரூபாயை எடுத்து லாட்டரி வாங்கியுள்ளார். இந்த நிலையில், லாட்டரி சீட் குலுக்கலில் அனூப்க்கு ரூ.25 கோடி கிடைத்துள்ளது. இந்த லாட்டரி சீட்டுக்கான பல்வேறு பிடித்தம் போக அனூப்க்கு ரூ.15 கோடியே 75 லட்சம் கிடைக்கும். முன்னதாக, கடன் சுமை காரணமாக மலேசியா நாட்டுக்கு சமையல் வேலைக்கு செல்ல இருந்தார் அனூப். மேலும். இதற்காக வங்கியில் ரூ.3 லட்சத்துக்கு கடன் கேட்டு விண்ணப்பித்த நிலையில் லாட்டரியில் ரூ.25 கோடி கிடைத்துள்ளதால், வெளிநாட்டுக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே முதலில் குடும்பத்துக்காக வீடு ஒன்றை கட்ட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.