டில்லியில் இருந்து ஜபல்பூருக்கு இன்று (ஜூலை 2ஆம் தேதி) சென்ற ஸ்பைஸ்ஜெட் Q400 SG-2962 விமானம் நடுவானில் 5,000 அடி உயரத்தில் பறந்துகொண்டு இருந்தபோது கேபினில் இருந்து புகை வெளிவந்துள்ளது. லேசாக தொடங்கிய புகை விமானம் முழுவதும் பரவியதால் பயணிகள் பதறியுள்ளனர். இதனை விமான கேபினட் குழு கவனித்தையடுத்து தகவலறிந்து விமானத்தை தரை இறக்க விமானி முடிவு செய்தார். இதனைத்தொடர்ந்து விமானம் டில்லியில் மீண்டும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. விமானத்தில் புகை வந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.