இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி முதல் நேற்று வரை விளையாடிய ஒரு நாள் கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை இந்திய அணி வீழ்த்தி தொடரை 39 ரன்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் அபார வெற்றிக்கு காரணமாகவும் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்திய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டநாயகி விருதுடன் தொடர் நாயகி விருதையும் வென்றார். முன்னதாக இந்தியா-இலங்கை இடையே நடைபெற்ற டி20 தொடரையும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.