இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்று கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 435ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 994 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் 2.41 சதவிகிதம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து நேற்று 4,216 பேர் குணமடைந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 757ஆக அதிகரித்துள்ளது.