விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதில், நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000-லிருந்து ரூ.6000-ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுத்தொடர்பான அரசாணையில், “விளையாட்டு வீரர்கள் அவர்களின் இளமைக் காலத்தில் வெற்றியை குவிக்கின்றனர். விளையாட்டு வீரர்களின் வலிமையும், ஆற்றலும் பொருந்திய காலம் நிறைவு செய்த பிறகு சாதனைகளை அங்கீகரித்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது” என்று குறிப்படப்பட்டுள்ளது.