day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – அச்சத்தில் மக்கள்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – அச்சத்தில் மக்கள்

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அந்த விவரங்களின் படி, 15 ஆயிரத்து 940 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 91 ஆயிரத்து 779 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரம் வரை 12 ஆயிரத்து 425 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனைத்தொடர்ந்து, இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 61 ஆயிரத்து 481 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 20 பேர் இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 974 ஆக அதிகரித்துள்ளது.இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில், குறிப்பாக சென்னையில் மட்டும் 616 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!