திரைப்படத் தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அதில், திரைப்படத் தயாரிப்பாளரும், பைனான்சியருமான அன்புச் செழியன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு, லட்சுமணன் (2டி), ஞானவேல் ராஜா, சத்யஜோதி தியாகராஜன், சீனு ஆகியோரின் வீடுகள், அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்கள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, திரைப்படத் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.