ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வை அந்த மாநிலம் முழுவதும் இருந்து மொத்தமாக 6 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 70.70 சதவிகிதம் பேர் மாணவிகளும், 64.02 சதவிகிதம் பேர் மாணவர்களும் அடங்குவர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த 3ஆம் தேதி வெளியானது. அதில், மொத்தமாக 4 லட்சம் மாணவ மாணவிகள் மட்டுமே தேர்ச்சிப்பெற்றுள்ளனர். 2 லட்சம் பேர் தோல்வி அடைந்தனர். தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாக மாநிலம் முழுவதும் 34 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.