சென்னை-28 திரைப்படம் மூலம் தமிழ்திரை உலகில் இயக்குநராக அறிமுகமான வெங்கட்பிரபு தனது தற்போதைய திரைப்படங்களான மாநாடு மற்றும் மன்மத லீலை வெற்றிக்கு பிறகு அடுத்த திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார். முன்னதாக இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட வெங்கட்பிரபுவின், திரைப்படங்களுக்கு யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்து வந்த நிலையில் தற்போது வெங்கட்பிரபு இயக்கவுள்ள ’என்சி22’ என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணி செய்யவுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுவரை 10 திரைப்படங்களை இயக்கியுள்ள வெங்கட்பிரபுவின் 11ஆவது திரைப்படம் ’என்சி22’ என்பது குறிப்பிடத்தக்கது.
A dream come true moment for me!! Joining hands with my uncle (periyappa) #isaignani @ilaiyaraaja for the first time along with my brother @thisisysr for #NC22 #VP11 pic.twitter.com/OVzZS03T8B
— venkat prabhu (@vp_offl) June 23, 2022