ஐ2யூ2 முதல் உச்சி மாநாடு இன்று இணைய வழி காணொலி மூலம் நடைபெறுகிறது. இதில், அமெரிக்கா, இஸ்ரேல், அரபு அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய 4 நாடுகளை அடங்கி உருவாக்கப்பட்ட புதிய குழு இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளது. இந்தியா சார்பில் பிரதமர் மோடியுடன் மற்ற 3 நாட்டு தலைவர்களும் கலந்துகொண்டனர். நீர், எரிசக்தி உள்ளிட்ட 6 துறைகளில் கூட்டு முதலீடு பற்றி விவாதிக்கப்படுகிறது. மேலும், தற்போது நிலவும் பொருளாதார சூழல், முதலீடுகள் குறித்தும் பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.