1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி தொடங்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவையை நிறுத்திக்கொள்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இணைய பயன்பாடு தொடங்கிய காலக்கட்டத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான் முதன்மையான தேடுதல் தளமாக இருந்தது. இதற்கு அடுத்து கூகுள் குரோம் அதற்கு அடுத்து புதிய அப்டேட்களுடன் பயர்பாக்ஸ், மைக்ரோசாப்ட் எட்ஜ் போன்ற தேடுதல் தளங்கள் வந்தவுடன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் மவுசு குறைந்தது. இந்த நிலையில் இன்று முதல் (ஜூன் 15ஆம் தேதி) இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவையை நிறுத்திக்கொள்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் தகவல் அளித்துள்ளது.