இந்து சமய அறநிலையத்துறை புனிதமானது. இந்த அரசு இந்து சமய அறநிலையத்துறையில் ஆக்கப்பூர்வமான செயல் எதுவும் செய்யவில்லை. பில்டப் மட்டுமே இருக்கிறது. திருக்கோவில் சொத்துக்கள் தொலைந்து போகிறது என்ற மதுரை ஆதீனத்தின் கருத்தை உதாசீனப்படுத்தி விட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அனைவரும் மனம் குளிரும்படி செய்வோம் என்று சொல்வார் பாருங்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பராசக்தி பட வசனத்தை போல “கோவில் கொடியவர்களின் கூடாரமாக மாறி விடக்கூடாது என்று இருக்கும். அது போல தற்போது மாறிவிட்டது. கருணாநிதியின் வசனத்தை உண்மையாக்கும் முயற்சியில் தற்போதைய அரசு அதனை செய்து கொண்டிருக்கிறது. மேலும், நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் வருவது போல “திரும்ப திரும்ப பேசுற நீ” என சசிகலா அதிமுக தன்னுடையது என கூறி வருகிறார். அனைத்து நீதிமன்றங்களும் அதிமுக யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக தெளிவாக தீர்ப்பு கூறியுள்ளது. நாங்கள் தான் அதிமுக என்று கூறியுள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலில் சசிகலா ஈடுபட்டு வருகிறார். அவரின் கருத்தை யாரும் பொருட்படுத்துவதில்லை. அமமுகவில் உள்ளவர் அனைவரும் அதிமுகவிற்கு வந்து விட்டனர். 4 பேர் மட்டுமே உள்ளனர். பணத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார். சசிகலா தீய சக்தி. எந்த காலத்திலும் சசிகலாவை கட்சியில் சேர்க்கமாட்டோம் என்பதே நிலைபாடு. பாஜகவுக்கு சசிகலா வரலாம் என நயினார் நாகேந்திரன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று அண்ணாமலையே கூறிவிட்டார். அதுபற்றி நான் எதுவும் சொல்லமுடியாது. சசிகலாவை பாஜகவில் சேர்த்து தானே படுகுழியில் விழ வேண்டிய நிலைக்கு பாஜக செல்ல வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். அதிமுக பொதுக்குழுவில் என்ன தீர்மானம் குறித்து தற்போது பேச முடியாது என்று அவர் பேசினார்.