பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ககாயன் மாகாணத்தின், தலுபிரி தீவில் இருந்து தென்கிழக்கே 27 கி.மீ. தொலைவில் 27 கி.மீ. ஆழத்தில், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2:40 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் லுசோன் தீவில் உள்ள அபாயோ, இலோகோஸ் சுர் உள்ளிட்ட அருகிலுள்ள மாகாணங்களிலும் உணரப்பட்டுள்ளது. பசிபிக்கின் “ரிங் ஆஃப் ஃபயர்” பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.