கடலூர் மாவட்டம், எம்.புதூர் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வசந்தா என்ற பெண்ணுக்கு கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடுப்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.