சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகள் குறித்து போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கள் கூறியதாவது:- போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரையில் கிராஸ் காஸ்ட் காண்ட்ரக்ட் முறையில் 500 பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகம் செயல்படுத்தலாம் என்று உலக வங்கி கருத்துக்களை வழங்கியுள்ளது.
சென்னையில் அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்த சாதக பாதகங்களை ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கும். மக்கள் தொகையின் அடிப்படையில் கூடுதல் வசதிகளை அளிப்பதற்கு தான் இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது. அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவது தான். எனவே பேருந்து தனியார் மயமாவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிடவேண்டும். ஏற்கெனவே இயக்கப்பட்டுவரும் வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தப்படாது, இதில் பணியாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.
சென்னையில் தனியார் பஸ்களில் மாணவர்கள், மகளிர், முதியோர்களுக்கான சலுகைகள் தொடரும். பெண்களுக்கான இலவச போக்குவரத்து திட்டம் தொடர்ந்து செய்படுத்தப்படும். இந்த திட்டம் டெல்லி, கேரளா, பெங்களூரு போன்ற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் பேருந்து எந்த வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும், எவ்வளவு கட்டணம் என்பதை அரசே நிர்ணயம் செய்யும் என்று கூறியுள்ளார்.