இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ஆம் தேதி 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. 72 நாடுகள் பங்கேற்ற இந்த விளையாட்டு போட்டிகளில் 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்களின் ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் (67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம்) முதலிடமும், இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் (57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம்) இரண்டாவது இடத்தையும், கனடா 92 பதக்கங்களுடன்(26 தங்கம்,32 வெள்ளி, 34 வெண்கலம்) மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்ததை இளவரசர் எட்வர்ட் முறைப்படி அறிவித்தார். நிறைவு நாள் நிகழ்ச்சியில் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன.
#CommonwealthGames #CWG2022 #Boxing #TeamIndia #Cheer4India