அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸில் கடந்த மார்ச் மாதம் 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவை அமெரிக்க நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் வில் ஸ்மித் மனைவி குறித்து கிண்டலடித்து பேசினார். இதையடுத்து தன் மனைவி குறித்து கிண்டலடித்த கிறிஸ் ராக் கன்னத்தில் வில் ஸ்மித் அறைந்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் களம் இறங்கினர். இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது நிகழ்வைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பை கிறிஸ் ராக் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.