யுபிஐ பணப்பரிவர்த்தனை முறையை கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த முறை, பயனாளர்களுக்கும் வணிகர்களுக்கும் கட்டணமில்லா சேவையாகவே வழங்கி வருகிறது. இந்த நிலையில், யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள மத்திய நிதியமைச்சகம், யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பொதுச்சேவை, பொதுமக்களின் வசதிக்காக, பொருளாதார மேம்பாட்டுக்காகக் கொண்டுவரப்பட்டது. அதற்கு கட்டணம் வசூலிப்பது என்ற எந்த பரிசீலனையும் மத்திய அரசிடம் இல்லை. அதே வேளையில், சேவை வழங்குபவர்களின் செலவினத் தொகையை திரும்பப் பெறுவதற்கான வழிகள் வேறு முறைகளில் கண்டடையவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த விளக்கத்தின் மூலம், யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்யும்போது, எந்த விதமான கட்டணம் வசூலிப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை, எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பது தெளிவாகியுள்ளது.