அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவினருக்கான இறுதிப்போட்டியில் நார்வே நாட்டின் காஸ்பர் ரூட்டை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லஸ் அல்கரஸ் எதிர்கொண்டார். அப்போது, ரூட்டை 6-4, 2-6, 7-6, 6-3 என்ற புள்ளிகளுடன் 3-1 செட் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார் அல்கரஸ். 19 வயதே ஆன கார்லஸ் அல்கரஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றது டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.