பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் மாநில செயற்குழு கூட்டம் இன்று தெலுங்கானா மாநிலத்தில் இன்று (ஜூலை 2ஆம் தேதி) தொடங்கியது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள பாஜகவின் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் நாளை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடியை தெலுங்கானா அரசு சார்பில் அவரை வரவேற்க, முதலமைச்சர் சந்திரசேகர ராவ் விமான நிலையத்திற்கு செல்லவில்லை. ஒரு மாநில அமைச்சர் மட்டும் தெலுங்கானா அரசு சார்பில் பிரதமரை வரவேற்க செல்வார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 3ஆவது முறையாக தெலுங்கானா செல்லும் பிரதமரை அந்த மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளார்.