day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பிக்பாஸ் சீசன்-6 போட்டியாளர்கள் இவர்கள் தானா!

பிக்பாஸ் சீசன்-6 போட்டியாளர்கள் இவர்கள் தானா!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் 9ஆம் தேதி தொடங்க இருக்கிறது. நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் வழக்கம் போல நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களை அறிவிப்பார். இந்த நிலையில், எப்போதும் போல, போட்டியாளர்கள் யார்யாரெல்லாம் இடம்பெற இருக்கின்றனர் என்ற கணிப்பு இணையவாசிகளிடையே உலா வரத்தொடங்கியுள்ளது. அதன்படி, தொகுப்பாளர்கள் திவ்ய தர்ஷினி, ரக்ஷன், தொகுப்பாளர் மற்றும் சின்னத்திரை நடிகை மகேஷ்வரி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன், சத்யா தொடர் புகழ் ஆயிஷா, பாடகி ராஜலட்சுமி, நடிகை மைனா நந்தினி, சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி, டான்ஸ்மாஸ்டர் ராபர்ட், நடிகை ஸ்ரீநிதி, சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து, இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி, நடிகை விசித்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!