தென்னாப்பிரிக்கா நாட்டில் உலக அலைச் சறுக்கு சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் உலக அளவில் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அலைச் சறுக்கு வீரர்கள் கலந்துகொண்டு சாகசங்களை நிகழ்த்தினர். போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த வீரர் எதான் எவிங், தென்னாப்பிரிக்க வீரர் ஜோக் ராபின்சனை வீழ்த்தி பட்டம் வென்றார். மகளிர் பிரிவில் இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை டைலர் ரைட்டை வீழ்த்தி, பிரேசில் நாட்டின் டட்டானியா வெஸ்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.