day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

திரைத்துறை, தொடக்கக் கல்வி பட்டயம், ஐடிஐ, யோகா, உடற்கல்வி படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

திரைத்துறை, தொடக்கக் கல்வி பட்டயம், ஐடிஐ, யோகா, உடற்கல்வி படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தேர்வில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்கள் சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் & தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் திரைத்துறை சார்ந்த பல்வேறு படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 4 ஆண்டு கால Bachelor of Visual Arts படிப்பில் Cinematography, Digital Intermediate, Audiography, Direction and ScreenPlay Writing, Film Editing, Animation and Visual Effects ஆகிய பிரிவுகளில் சேர இன்று தொடங்கி வரும் ஜூலை 22ஆம் தேதி வரை http://www.tn.gov.in அல்லது http://www.dipr.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 27 இறுதி நாள் ஆகும். இதேபோல், தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் (DEE) சேர https://scert.tnschools.gov.in இணையதளத்தில் ஜூலை 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனுடன், ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் வரும் ஜூலை 20 வரை http://www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள், சந்தேகங்களுக்கு 9499055612 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதைத்தொடர்ந்து, உடற்கல்வி, விளையாட்டு, யோகா படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு உடற்கல்வியியல் & விளையாட்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. B.P.Ed., M.P.Ed., உள்ளிட்ட 17 வகையான படிப்புகளில் சேர http://www.tnpesu.edu.in என்ற இணையதளத்தில் வரும் 26ஆம் தேதி முதல் ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிஇ, பிடெக் படிப்புகளில் நேரடி 2ம் ஆண்டு சோ்க்கைக்கு ஜூன் 24ஆம் தேதி இன்று முதல் ஜூலை 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த படிப்பில் சேர தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு, பிஎஸ்சி பட்டப் படிப்பு முடித்தவா்கள் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!