மாநிலங்களவை நியமன எம்.பி.,யாக கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநரான (பாகுபலி) ராஜமெளலியின் தந்தையும் தயாரிப்பாளர் விஜயேந்திர பிரசாத், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கொடையாளரும் தர்மஸ்தலா கோயில் நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்டே நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, புதிய நியமன எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.