தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளி மெட்ரிக் மாணவர்களின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகளை நேற்றுமுன்தினம் சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இதனையடுத்து, 12ஆம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்கள் இளங்களை படிப்புகளில் அரசு கலை கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது. மேலும், மாணவர்கள் www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதளத்தில் ஜூலை 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.