2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்யா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் அவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதால் அடுத்த குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தலை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 19ஆம் தேதி கடைசிநாளாகும். வேட்புமனுக்களை வாபஸ் பெற ஜூலை 22ஆம் தேதி கடைசிநாள் ஆகும்.