ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கடந்த ஆண்டு கைப்பற்றினர். ஆட்சி மாற்றத்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டில் இருந்து தற்போது இரண்டு மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை சேவை நிறுவனங்களான கிளிக்.ஆஃப் மற்றும் பக்கல் தங்களது பணிகளை ஆப்கானிஸ்தானில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. ஆப்கானில் பொருளாதர நிலை மேம்படும் போது மீண்டும் தங்களது நிறுவனங்களை தொடங்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளன.