சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் மருது சகோதரர்களுக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், தியாகிகள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ரூ.1 கோடியில் சிலைகள் நிறுவப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது தெரிவித்திருந்தார். அதன்படி, ரூ.34 லட்சம் மதிப்பில் மருது சகோதரர்கள் சிலை அமைக்கப்படும் என்றும் 3 மாதங்களுக்கு உள்ளாக சிலையை நிறுவி முடிக்கவும் பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.