 
                    
                    அட்டக்கத்தி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பா.ரஞ்ஜித் அதன் பின்னர், மெட்ராஸ், கபாலி, காலா திரைப்படங்களை இயக்கி இருந்தார். பின், ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மூலம் திரைப்படங்களை தயாரிக்கத் தொடங்கியுள்ளார். இதையடுத்து, இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மற்றும் யாழி பிலிம்ஸ் இணை தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பொம்மை நாயகி’. இந்த திரைப்படத்தில் யோகி பாபு நடித்துள்ளார். நடிகர் யோகி பாபு முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்தாலும் சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஷான் இயக்கியுள்ள பொம்மை நாயகி திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
 
     
     
     
     
    