நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, ஒவ்வொரு கோடை சீசன் போதும் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் புகழ் பெற்ற குதிரை பந்தயம் நடத்துவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி குதிரை பந்தயம் தொடங்கியது. இந்த பந்தயத்தின் ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு கோப்பைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஆண் குதிரைகள் மட்டும் பங்கேற்ற ’நீலகிரி 2000 கின்னீஸ்’ குதிரை பந்தயம் நடைபெற்றது. இந்தபந்தயத்தில் வெற்றிபெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு நீலகிரி 2000 கின்னீஸ் கோப்பையும் குதிரை வீரர்களுக்கு நினைவு கோப்பைகளும் வழங்கப்பட்டது. இந்த குதிரை பந்தயத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.