day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

சொத்து வரி 5 ஆண்டுகளாக செலுத்தாதவர்கள் 3 மாதத்துக்குள் செலுத்தினால் 20 சதவீதம் வரி சலுகை

சொத்து வரி 5 ஆண்டுகளாக செலுத்தாதவர்கள் 3 மாதத்துக்குள் செலுத்தினால் 20 சதவீதம் வரி சலுகை

சென்னை : சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று முன்தினம் மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்தார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்: சென்னை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 44,436 சொத்துடமைதாரர்கள் ரூ.245கோடி வரி நிலுவை வைத்துள்ளனர். இதில் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால் மாநகராட்சிக்கு வரி நிலுவைத் தொகை ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது. இதன் காரணமாக, ஒரு முறைசிறப்பு நிகழ்வாக, 5 ஆண்டுகளுக்குமேலாக சொத்து வரி நிலுவைத்தொகை வைத்துள்ளவர்கள் 3 மாதகாலத்துக்கு நிலுவைத் தொகைசெலுத்தினால் 20 சதவீதம் வரைவரிச் சலுகை வழங்க வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் அரசு அரசாணைவெளியிட வலியுறுத்த வேண்டும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!