day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வீடு வாங்கலாம் வாங்க – லதா ரகுநாதன்

வீடு வாங்கலாம் வாங்க – லதா ரகுநாதன்

 

கொரோனாத் தொற்று இன்னும் முழுவதுமாக சென்றுவிடவில்லை. ஆனால், பலரும் அவர்களின் அன்றாட அலுவல்களுக்குத் திரும்பிவிட்டனர்.கீழே விழுந்து கிடந்த பொருளாதாரம் லேசாக மூச்சு விடத் தொடங்கி உள்ளது. இதில் நம் கவனத்தை ஈர்ப்பது வீடு, நிலம், ஃபிளாட் போன்றவற்றை வாங்கி விற்பதில் ஏற்பட்டிருக்கும் உயர்வு நிலை. ஆக, பலர் வீடுகளில் தங்கள் முதலீட்டை மறுபடியும் தொடங்கிவிட்டார்கள். இந்தச் சூழலில் பலருக்கு ஆசை இருக்கிறது தாசில் பண்ண, ஆனால் அதிர்ஷ்டம் இருக்கிறது மாடு மேய்க்க என்ற எண்ணத்தில் ஒடுங்கித்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கும் தீர்வுகள் உள்ளன.அந்த வரிசையில் நாம் அரசாங்கத்தின் முக்கியமான திட்டம் ஒன்றைப்பற்றித் தெரிந்து கொள்வோம்.

முதல் முதலில், 2015 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, PMAY திட்டம் அதில் அறிமுகப்படுத்தப்பட்டது. PMAY யின் முழு வடிவம் Pradhan Mantri Awas Yojana. இந்தத் திட்டத்தின் நோக்கம், வீடு இல்லாதவர் அனைவருக்கும் 2022க்குள் வீடு ஒன்று கொடுக்கப்படும் என்பதே. தற்போது இந்தத் திட்டம் 31 மார்ச் 2022 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பின் ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் நிதி அறிக்கை சமர்ப்பிக்கும் போது இந்தத் திட்டத்தில் சில சில சிறிய மாறுதல்களைக் கொண்டு வந்து கொண்டிருந்தது. கடைசியாக 2021ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட நிதி அறிக்கையில், அதிகப்படியான வருமான வரி விலக்காக ரூ 1.5 லட்சமும், இந்தத் திட்டத்தின் நீடிப்பு 2022 வரை என்ற அறிக்கையும் இருந்தது.

திட்டத்தின் சாராம்சம்:

வீடு வாங்கு வதற்கோ அல்லது கட்டுவதற்கோ எடுக்கப்படும் கடனுக்குக் குறைந்த வட்டியாக 6.5% விதிக்கப்படும். இவ்வாறு செய்யும்போது, வருமான வரி கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள்கூடச் சுலபமாக தங்களுக்கு என்று ஒரு வீட்டை வாங்க இயலும்.

இதற்காக அரசாங்கத்தின் இணைப்பில் தரமான வீடுகள் கட்டித்தரப்படும். இந்த வீடுகளை வாங்குவதற்குத்தான் வங்கிகள் மூலம் கடன் வசதியும் கொடுக்கப்படும்.

இந்த வட்டிக்குறைப்பு, 20 வருடம் வரையில் வாங்கப்பட்ட கடனுக்குப் பொருந்தும். அதாவது, கடன் 25 வருடத்திற்கு எடுக்கப்பட்டால், இந்த வட்டிக் குறைப்பு முதல் 20 வருடங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். அதற்கு அதிகமான வருடங்களில், சாதா வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் விதிக்கப்படும்.

அதே போல், மூத்த குடிமக்கள் அல்லது உடல் நலம் குன்றியவர்கள் தங்கள் பெயரில் கடன் வாங்கினால், இவர்களுக்குத் தரைத்தளத்தில் உள்ள வீடுகள் கொடுக்கப்படும்.

யார் இந்தத் திட்டத்தின்கீழ் வருவார்கள்?

இந்தத் திட்டத்தில் கடன் வாங்குபவர்கள் நான்கு வகைப்படுத்தப்படுகிறார்கள்.

ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருட வருமானம் உள்ளவர்கள். இவர்கள் MIG I  அதாவது மிடில் இன்கம் க்ரூப் 1 என்று வகைப்படுத்தப்படுவார்கள்.

இரண்டாவது வகை ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையிலான வருட வருமானம் உள்ளவர்கள். இவர்கள் MIG II.

மூன்றாவது LIG. அதாவது லோயர் இன்கம் க்ரூப். இவர்களின் வருட வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை.

 கடைசியாக EWS அதாவது Economically weaker section. இவர்கள் மிகவும் பிற்படுத்தப்ப ட்டவர்கள். இவர்களின் வருட வருமானம் ரூ.3 லட்சத்திற்கு உட் பட்டு இருக்க வேண்டும்.

இவர்களைத் தவிர SC,ST,OBC மற்றும் EWS, LIG வகையின் கீழ் உள்ள பெண்களும் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படுவார்கள்.

யாருக்கு எவ்வளவு கடன் தொகை மற்றும் வட்டி விகிதம்?

மேலே குறிப்பிட்டுள்ள வகையினருக்கு ஏற்றவாறு கடன் தொகை மற்றும் வட்டி விகிதமும் மாறுபடுகிறது.

மிகவும் தாழ்த்தப்பட்ட வருமானம் அதாவது EWS.

இவர்களுக்கு ரூ.6 லட்சம் கடன் தொகைக்கு வருடத்திற்கு 6.5% வட்டி தள்ளுபடி கொடுக்கப்படும்.

LIG வகையினருக்கு ரூ.6 லட்சம் வரை கடன் தொகையும், வருடத்திற்கு 6.5% வட்டி தள்ளுபடி.

MIG I வகையினருக்கு ரூ.9 லட்சம் கடன் தொகை மற்றும் வருடத்திற்கு வட்டி தள்ளுபடி 4%.

MIG II வகைக்கு ரூ.12 லட்சம் கடன் தொகை மற்றும் 3% வட்டி தள்ளுபடி வருடத்திற்கு.

இந்தத் திட்டத்தின்கீழ் பலன் பெறுவது எப்படி?

பல வங்கிகள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. முதலில் நீங்கள் வாங்கப்போகும் வீடு இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வங்கியே இந்தத் தகவலை உங்களுக்குக் கொடுக்கக்கூடும். இல்லை என்றால், அவர்களிடம் PMAY தகவல் துறை எண்ணை வாங்கிக்கொள்ளுங்கள். இதற்குத் தொடர்பு கொண்டு பேசினால் உங்களுக்குத்தேவையான விவரங்கள் கிடைக்கும்.

அதைத் தெரிந்து கொண்ட பின்னர், வங்கியில் கடனுக்கான விண்ணப்பத்தைச் செலுத்தவும்.

உங்கள் விண்ண ப்பம் மத்திய பொது நிறுவனம் அதாவது சென்ட்ரல் நோடல் ஏஜென்சி என்ற அமைப்பால் சரிபார்க்கப்படும்.

உங்கள் விண்ணப்பம் சரியாக இருந்தால், அந்த அமைப்பு உங்கள் மானியத்தொகையை வங்கிக்கு அனுப்பிவிடும். இங்கே மானியம் என்பது உங்களுக்குக் கொடுக்கப்படும் வட்டி விகித தள்ளுபடி. இந்தத் தொகை நீங்கள் எடுக்கும் கடன் தொகை மற்றும் எடுக்கப்படும் வருடம் மற்றும் 6.5% அல்லது 4% அல்லது3% என்று உங்களுக்கான வட்டி விகிதத்தில் கணக்கிடப்பட்டு அனுப்பப்படும்.

இந்தத் தொகையை ஏற்ற வங்கி, அதை உங்களுக்குக்கொடுக்கப்பட்ட கடன் தொகையிலிருந்து கழிக்கும். இதனால், இனி வரும் வருடங்களுக்கு நீங்கள் குறைவான தொகையின் மீது வட்டி செலுத்தினால் போதுமானது.

நீங்கள் எந்த வகையில் இருக்கிறீர்கள்?

இதைத் தெரிந்துகொள்ள PMAY Eligibility என்று கூகிளில் சென்று பார்த்தால் அதில் விவரங்கள் இருக்கும். இது 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் நிலவரப்படி அமைக்கப்பட்டது.

இணையத்திலும் விண்ணப்பிக்கலாம்

இதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது உங்கள் ஆதார் எண். இதைக்கொண்டு PMAY போர்ட்டலில் நீங்கள் நுழைய இயலும். அதில் விண்ணப்பிக்கும் விதம் பற்றிய தெளிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பின்பற்றி மிகச் சுலபமாக விண்ணப்பிக்கலாம்.

அதே போல் http://pmaymis.gov.in என்ற இணையதளத்துக்குச்  சென்று உங்கள் விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

மானியம் எவ்வளவு நாட்களில் கிடைக்கும்?

சாதாரணமாக விண்ணப்பித்த  மூன்று நான்கு மாதங்களுக்குள் தொகை கிடைத்துவிடும்.

விண்ணப்பிக்கப் பணம் செலுத்த வேண்டுமா?

இணையம் மூலம் சமர்ப்பித்தால் எந்தத் தொகையும் தரத் தேவை இல்லை. ஆனால் இதற்கென நியமிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலம் விண்ணப்பித்தால் , விண்ணப்ப தொகையாக ரூ. 25 மற்றும் சர் சார்ஜ் செலுத்த வேண்டும்.

 எவ்வளவு பரப்பளவு வாங்க இயலும்?

EWS வகையினர் 30 sq m, LIG வகையினர் 60 sqm, MIG I 160 sqm, MIG II 200 sqm பரப்பளவு கொண்ட வீடுகளை வாங்க முடியும்.

ஒவ்வொரு வகைக்கும் கிடைக்கக்கூடிய

அதிக பட்ச மானியம்

மேலே கூறப்பட்டுள்ள பரப்பளவு, ஆண்டு வருமானம், இருபது வருடக் கடன் திட்டம், அதிகபட்ச கடன் தொகை  இவற்றை வைத்து, அவற்றிற்கான வட்டி விகிதக் குறைப்பைக் கணக்கிட்டு வரும் மானியத்தொகை

EWS.            ரூ.2,67,280

LIG.              ரூ.2,67,280

MIG I.          ரூ.2,35,068

MIG II.       ரூ.2,30,156

ஆண்டு வருமானம் கணக்கிடும் விதம்

மேலே கூறப்பட்டுள்ள வகை பிரிப்பு, ஆண்டு வருமானத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இங்கே ஆண்டு வருமானம் என்று சொல்லப்படுவது ஒரு நபரின் வருமானம்  மட்டுமல்ல. அந்தக் குடும்பத்தின் மொத்த வருமானம். விண்ணப்பம் செய்தவர், அவர் மனைவி வேலைக்குச் செல்பவர் என்றால் அவருடையது, பிள்ளைகள் வருமானம் பெற்றால் அவர்கள் வருமானம், அதே போல் தாய், தந்தையருக்கு வருமானம் ஏதாவது இருந்தால் அது, இப்படி அந்தக் குடும்பத்தின் மொத்த வருமானத்தையும் கணக்கிட வேண்டும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!