திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெகுந்தி சுங்கச்சாவடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.32 லட்சம் மதிப்பிலான ஆட்டோ உதிரிபாகங்களுடன் கூடிய மினி லாரியை வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடத்தி சென்றுள்ளார். சம்ப இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன், நகர காவல் ஆய்வாளர் நாகராஜன், உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையிலான காவலர்கள் லாரி திருடிய ராஜ்குமாரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். முன்னதாக கடத்தப்பட்ட லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.