day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

முதல் டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக இந்திய அணி சிறப்பான ஆட்டம்

முதல் டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக இந்திய அணி சிறப்பான ஆட்டம்

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணியினர் வெற்றியோடு தொடங்கும் வேட்கையுடன் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் டேகனரின் சந்தர்பால் 12 ரன்களும் , கேப்டன் கிரேக் பிராத்வைட் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ரேமன் ரைபர் 2 ரன்கள் , ஜெர்மைன் பிளாக்வுட் 14 ரன்கள் , ஜோசுவா டா சில்வா 2 ரன்கள் , ஜேசன் ஹோல்டர்18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அனியில் சிறப்பாக விளையாடிய அலிக் அதானாஸ் 47 ரன்கள் எடுத்தார்.இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட் , ஜடேஜா 3 விக்கெட் , ஷார்துல் தாகூர் , சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா , அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர்.தொடர்ந்து நிலைத்து ஆடி பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டனர்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 40 ரன்கள் , ரோகித் சர்மா 30 ரன்கள் எடுத்துள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!