day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

முகத்துக்கும் வரலாம் வாதம்

முகத்துக்கும் வரலாம் வாதம்

ஒருநாள் காலை என் நெருங்கிய தோழியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. அவர்
பேச்சில் சற்று பதற்றம் தெரிந்தது. அவர் கூறியதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்:
35 வயது நிரம்பிய தனது சகோதரிக்கு அன்று காலை எழுந்தவுடன் பல் துலக்கும்போது, சற்று
சிரமம் இருந்ததாகவும் வாயைக் குவிப்பதிலும், கொப்பளிப்பதிலும் சிரமம் இருந்தாகவும்
சொன்னார். மேலும், கண்ணாடியில் முகம் பார்க்கும்போது, வாய் சற்றுக் கோணலாக
இருப்பதாகவும், கண்கள் மூடித்திறப்பதில் சிரமம் இருப்பதாகவும் கூறினார்.
அவர் கூறியவற்றைக் கேட்டபோது இது முகவாதமாக இருக்கும் என்பது தெரிந்தாலும் அவரை
அழைத்து முகத்தைப் பார்க்கையில் அது ஊர்ஜிதமானது.முகவாதம் என்பது நம் முகத்தில்
இருக்கும் நரம்பில் ஏற்படும் ஒரு வகை வீக்கம்.
ஒருவருக்கு வசீகரமும், அழகும் கொடுப்பது முக அழகு. முக அழகிற்கு முகவாதத்தினால்
பாதிப்பு ஏற்படும்போது, பயம் அதிகரிக்கிறது. மேலும், இந்த நிலை நிலையானதாகிவிடுமோ
என்கிற அச்சம் அதிகரிக்கிறது.
நமது முகப்பகுதியில் உள்ள தசைகளுக்கு அதன் செயல்பாட்டிற்கான உந்துதலைக் கொடுப்பது
முக நரம்பு. இந்த நரம்பு மூளையிலிருந்து கிளம்பி முகத் தசைகளுக்குச் செல்கிறது.
முக நரம்பு பாதிக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. நாம் நீண்ட தூரம் காரிலோ
பேருந்திலோ பயணம் செய்யும்போது குளிர்ந்த காற்று முகத்தில் வீசும்போதும், வீட்டில்
ஏ.சி.யிலிருந்து வரும் காற்று முகத்தில் படும்படி உறங்கும்போதும், காதுகளில் ஏற்படும்

தொற்றுநோய் (Otitis Media) மற்றும் Herpes Simplex என்று சொல்லக்கூடிய ஒருவகை தொற்று
நோய் காரணமாகவும் இது ஏற்படலாம்.
மேலும் இது நீரிழிவு நோய் என்று சொல்லப்படும் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு
அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
முகவாதம் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் ஏற்படும்.
முகவாதம் எனும் Bell's Palsy ஏற்பட்டவுடன் அதற்கான தகுந்த மருத்துவரை அணுகி எதனால்
இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும்.
நரம்பு பாதிப்பு ஏற்பட்டுச் சில நாட்களில் சற்றுக் கடுமையானதாக இருக்கும்போது, அதன்
பாதிப்பைக் குறைப்பதற்கும் இதைச் சரி செய்வதற்கும் தகுந்த மாத்திரைகளை மருத்துவரின்
ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.
முகவாதத்தில் Bell's Palsy மற்றும் Facial Palsy என்று வெவ்வேறு நிலைகள் உள்ளன. இவற்றில்
Facial Palsy என்பது பக்கவாதம் எனப்படும் மூளைப் பாதிப்பின் போது ஏற்படும்.
பிசியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவம் Bell's Palsy மற்றும் Facial Palsy எனும்
முகவாதத்திற்குச் சிகிச்சை அளித்து நல்ல பலன்களைக் கொடுத்து வருகிறது.
ஒரு நரம்பு பல தசைகளைச் சுருங்கி விரியச் செய்து நம்மை அசைய வைக்கிறது. அவ்வாறே
முகத்திற்கு விநியோகிக்கப்படும் நரம்பு முகம், கண், வாய், மூக்கு ஆகியவற்றைச் சுற்றியுள்ள
தசைகளைச் செயல்பட வைக்கிறது.
நரம்பு பாதிப்படைந்த நிலையில் மின் தூண்டுதல் (Electrical Stimulation) மூலம், தசைகளுக்கும்
அதிர்வெண் மாற்றியமைக்கப்பட்ட (Frequency Hodulatool) தூண்டுதல்கள் மூலம் செயல்படச்
செய்யலாம்.
இதனைத் தொடர்ந்து நாமாகவே ஒவ்வொரு தசைக்குமான செயல்களை முகபாவனைகளாகப்
பயிற்சிகள் மூலம் செய்து வரலாம். மற்ற தசைகளைவிட முகத்தில் இருக்கும் தசைகள் விரைவில்
செயல்படத் தொடங்கிவிடும்.
இந்தப் பயிற்சிகளின்போது அவற்றைக் கண்ணாடியின் முன் செய்வதன் மூலம் அவை நல்ல
பலன்களை அளிக்கும். அண்மைக் காலங்களில் Mime Therapy எனப்படும் புதிய முறை நல்ல
பலன் அளிக்கிறது.
முகவாதம் சில துளிகள்
* முகவாதம் 15 வயதிலிருந்து 60 வயது வரை இருக்கும். யாரையும் பாதிக்கலாம்.
* ஆண், பெண் என இருபாலினத்தவரையும் சமமாகப் பாதிக்கும்.
* தூக்கமின்மை, நீண்ட பயணம், மன அழுத்தம் போன்றவை முகவாதத்திற்குத்
தூண்டுதலாக அமையலாம்.
* நரம்பு பாதிப்புக்குப் பல காரணங்கள் இருந்தாலும் நோய்த் தொற்று (Viral infection)
மற்றும் நரம்பு வீக்கம் (inflamation) இவை இரண்டுமே முக்கியக் காரணம்.
* பிசியோதெரபி மூலம் 95 சதவீத முகவாத்தைச் சரி செய்து முந்தைய நிலைக்கு
முகத்தைப் பயிற்சிகளின் மூலம் மீட்க முடியும்.

மைம் தெரபி
சிலருக்கு மின் தூண்டுதல் கொடுக்க முடியாத நிலையில் இந்த வகை சிகிச்சை முறை நல்ல
பலன் கொடுக்கும்.
முகவாதம் ஒருபக்க முகத்தைப் பாதிக்கும்போது, Mime Therapy சமச்சீர் நிலையை
ஏற்படுத்துகிறது.
இது முக பாவனைகள் மற்றும் உணர்ச்சிகளின் தூண்டுதல்களைப் பயிற்சிகள் மூலம் செய்யும்
ஒரு சிகிச்சை முறை.
முகவாதம் ஏற்பட்ட உடன் அதனால் ஏற்படும் முகம் மற்றும் கண்களின் மாற்றம் நம்மை
அச்சுறுத்துவதாக இருந்தாலும், ஆரம்ப நிலையிலேயே துரிதமான சிகிச்சை, பயிற்சிகள்
செய்தால் கண்டிப்பாகக் குணமாகிவிடும்.
இந்தப் பயிற்சிகளை இயன்முறை மருத்துவரிடம் முறையாகக் கற்றுக்கொண்டு பின்பற்றி
வந்தால் முகவாதம் வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிடும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!