day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மாயநிழல்! – அத்தியாயம்-6

மாயநிழல்! – அத்தியாயம்-6

நீலகண்டனின் வீடு வந்து சேரும் வரை லீனா ஏதும் பேசவில்லை. அவள் மனதில் என்ன ஓடுகிறது என்பது தெரியாத போதிலும் அவளாகவே அதைத் தன்னிடம் நிச்சயம் சொல்வாள் என்ற நினைப்பில் மேற்கொண்டு விக்ரமும் வற்புறுத்தவில்லை. வெள்ளை வேட்டி சட்டையில் கிளீன்ஷேவ் செய்யப்படாமல் தளர்வான உடலை சோபாவிற்குக் கொடுத்திருந்தார் நீலகண்டன். போன வாரம் அவரைப் பார்த்தவர்கள் இந்த நீலகண்டனின் உருவத்தோடு ஆறேழு வித்தியாசங்களைக் கண்டுபிடித்துப் பரிசுகளை வாங்கலாம் என்ற அளவிற்கு ஒரு மாற்றம் முகத்தில். மனைவியின் நிலைமையோ சொல்லவே வேண்டாம் என்பதுபோல் இருந்தது. கணவரின் வார்த்தைகளை இதுவரையில் மீறாத அவரின் முதல் மீறலே மகளைத் தொலைத்த கதையாகிப்போனதில் மூக்கு முட்ட வருத்தமும் அழுதழுது வீங்கிய கண்களுமாய்.
லீனாவும் விக்ரமும் உள்ளே நுழையவும்,
“ஜெயாவைப் பற்றித் தகவல் ஏதாவது தெரிந்ததா?” என்று முந்திக்கொண்டு கேட்டார் அந்ததாய்.
“விசாரிச்சிட்டு இருக்கிறோம்”.
“சார் உங்க மககிட்டே இருந்து போன் வந்ததா சொன்னீங்க?! மீண்டும் ஒருமுறை அவங்க என்ன பேசினாங்கன்னு சொன்னா அதிலேயிருந்து ஏதாவது ஒரு க்ளூ கிடைக்கலாம்”.
அவர் இறுகிய குரலோடு சொன்னார்.
“நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க சார். உங்களுக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா?”
“என் தொழிலில் மறைமுகப் போட்டிகள்தான் அதிகம். ஆனா, இப்படி யாரும் செய்ய வாய்ப்பில்லை. எனக்கு யார் மேலும் சந்தேகம் இல்லை” என்றார் நீலகண்டன் திட்டவட்டமாக. அதே நேரம் அவரின் போன் ஒரு புது எண்ணைக் கூட்டுச்சேர்த்து ஒலித்தது.
“ஸ்பீக்கரில் போட்டுப் பேசுங்க” என்றான் விக்ரம்.
பேசினார்.
ஜெயாவின் தீனமான அலறல். அதைத் தொடர்ந்து சிறு மெளனம். மீண்டும் ஒரு பேய்ச்சிரிப்பு. அதோடு போன் துண்டிக்கப்பட்டது. நீலகண்டன் சரிந்துவிழுந்த மனைவியையும், அணைந்த போனையும் வெறித்தார். முகம் முழுவதும் வெளுத்திருந்தது.
“ப்ளீஸ் என் பொண்ணைக் காப்பாத்துங்க. அவளுக்கு ஏதோ பெரிய ஆபத்துன்னு என் மனசு சொல்லுது. எத்தனை பணம் செலவானாலும் பரவாயில்லை. அவ எனக்கு ஒரே மக. ஊரே மெச்சுற அளவுக்குக் கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்கணும்னு ஆசைப்பட்டேனே…”
அதற்கு மேல் அவரால் பேசமுடியவில்லை.
விக்ரம் வந்திருந்த எண்ணைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டான். ஜெயாவின் கடத்தலில் லீனாவிற்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் சற்று முன்பு வந்திருந்த போன் காலில் அணைந்திருந்தது. அவளிங்கே இருக்கும்போதுதானே போன் வந்தது.
“தயவு பண்ணி என் பொண்ணைக் காப்பாத்திடுங்க. நாங்க யாருக்கும் எந்தக் கெடுதலும் பண்ணலை” மயக்கத்தில் இருந்து மீண்ட ஜெயாவின் அம்மா அழ,
“கெடுதல் நாமா செய்யணுங்கிறது இல்லைம்மா. ஒரு தவறு நடக்கும்போது அதைக் கண்டும் காணாமல் விடறதும் தப்புதானே?! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுன்னு ஒரு பழமொழி இருக்கு. அந்தமாதிரி உங்க கணவர் ஏதாவது ?” லீனாவின் பேச்சில் தலைநிமிர்ந்த நீலகண்டனின் விழிகள் அந்தச் சோகத்திலும் கூர்மையாய் அவளின் மேல் படிந்தன.
அழுத மனைவியைச் சமாதானப்படுத்தினான் சிவராமன். “அழாதே சாரதா, அந்தப் பொம்பிளை ஏதோ தெரியாம பேசிட்டாங்க. அவங்களுக்கு என்ன தெரியும் உன்னைப் பற்றி?” மடியில் முதுகு குலுங்கிக்கொண்டு இருந்த மனைவியை ஆறுதல்படுத்தினான். “அம்மா ஏன் அழறாங்க?” என்ற இமாலயக் கேள்வியைச் சுமந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தான் மகன்.
க்கும்… என்ற கனத்த கணைப்பொலியைக் கேட்டுக் கணவனும் மனைவியும் நகர்ந்தனர். சித்தப்பாவும் அவர் பின்னே ஒளிந்தபடி சற்று முன்னே வம்பு பேசிய பெண்மணியும்.
“இந்தா புள்ளே மன்னிப்புக் கேளு” அந்த வம்பு பேசிய பெண்மணியை அழைத்துவந்திருந்தார்.
“அய்யா சொன்னாங்களேன்னுதான் மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க சின்னய்யா நீயும்தாம்மா. எல்லாம் என் தலையெழுத்து. பத்துமாசம் சுமந்து பெத்தவளைக் கொன்னவகிட்டேயெல்லாம் மன்னிப்புக் கேட்கிற நிலைமை ஆகிப்போச்சு. என்ன பாக்கிறே உன் ஆத்தா எப்படிச் செத்தா தெரியுமா?”
“ஏய்….”
“அட சும்மாயிருங்க சின்னய்யா. எதுக்கோ செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதாம். அப்படித்தான் கையெடுத்துக் கும்பிடவேண்டிய உங்களோட கைபிடிக்க இவ நினைக்கலாமா? வாழறப்போதான் அவ நிம்மதியா இல்லை செத்தபிறகுகூடச் சவக்குழிக்குத் தூக்கிட்டுப்போக ஆளில்லாம சீரழிஞ்சாளே அந்தப் புண்ணியவதி. அதையெல்லாம் நினைச்சா இவளை மன்னிக்க முடியுமா? இதுலே மன்னிப்புக் கேட்கணுமாம் மன்னிப்பு. உங்க திருப்திக்குக் கேட்டுகிறேன், மன்னிச்சிக்கோடிம்மா” என்று கத்திவிட்டு அவள் யார் பக்கமும் திரும்பாமல் விறுவிறுவென நடந்துவிட்டாள்.
சாரதாவின் உடல் சக்தியிழந்தவளைப் போல துவண்டது.
“என்ன சித்தப்பா இது” என்று திகைத்து நின்றவரைப் பார்த்துக் கத்தினான் சிவராமன். அவர் ஏதும் பேசாமல், “அப்பா வரச்சொன்னாரு, சரி இந்தப் பொண்ணு பேசினதுக்காக சாரதா வருத்தப்படுமேன்னு மன்னிப்புக் கேட்க கூட்டிவந்தேன். அவ இப்படி செய்வான்னு எதிர்பார்கலை”
சாரதா முகம் நிமிரவில்லை. “அம்மாவுக்கு என்னாச்சு? அவங்க இயற்கையாத்தான் இறந்தாங்களா இல்லை?” வார்த்தைகள் முடியும் முன்னரே மூச்சிரைத்தது.
“அதெல்லாம் இப்போ எதுக்கும்மா?”
“சொல்லுங்க சித்தப்பா. அவங்கம்மாவுக்கு என்னாச்சு?” மனைவியின் துயரம் தாங்காமல் கேட்டான் சிவராமன்.
“சாரதாவும் நீயும் போனபிறகு ஒட்டுமொத்த ஊரின் கோபமும் அவங்க அம்மாமேலத்தான் திரும்புச்சு. இது கிராமம். அக்கம் பக்கம் எல்லாம் அசிங்கமா பேசினாங்க. மானஸ்தி அவ தூக்குலே தொங்கிட்டா. நாங்க யாரும் ஏதும் செய்யலை. ஆனா, ஊர்மக்கள் நியாயத்துக்குக் கட்டுப்பட்டவங்க. அவளோட இறுதி காரியத்துக்கு யாரும் போகலை. இரண்டு நா பொணம் சீந்துவாரில்லாம கிடந்தது. அதுக்குப்பிறகு நான்தான் வெட்டியானை விட்டுக் குழியிலே இறக்கச்சொன்னேன்”
அவர் சொல்லி முடித்ததும் ஓவென்று குரலெடுத்து அழுதாள் சாரதா.
“நல்லாயிருக்கு வீட்டுக்கு வந்த மருமக நாளும் கிழமையும் அதுவும் எழவு வீட்டுலே அழறா மாதிரி அழுதா வீடு வெளங்குமா? குலம் பார்த்து எடுத்திருந்தா குறையைக்கூட மனசிலே போட்டுகிட்டுக் கிடந்திருப்பா. இவ…”
சுருக்கென்று வந்து விழுந்த வார்த்தைகளில் நிமிர்ந்து கண்ணீரை விழுங்கினாள் சாரதா, கூடவே தாயைக் குறித்த வேதனைகளையும் அவளுக்கு எதிரே வேட்டைக்குப் பாயும் புலியைப் போல சிவராமனின் அப்பா நின்றிருந்தார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!