day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பெண்களும் தொழில்முனைவோர் ஆகலாம்… – அகிலா ராஜேஸ்வரி

பெண்களும் தொழில்முனைவோர் ஆகலாம்… – அகிலா ராஜேஸ்வரி


டை பவுண்டேஷன் 1992ஆம் ஆண்டு அமொிக்காவில் நிறுவப்பட்ட ஒரு நிறுவனம். அமொிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகள் செய்யலாம் என்று சின்னதாக உருவாக்கப்பட்டதுதான் டை பவுண்டேஷன். 14 நாடுகளில் 64 கிளைகளாக இயங்கிக்கொண்டிருக்கிறது. சென்னையில் உள்ள டை பவுண்டேஷனுக்கு நிர்வாக இயக்குனராக இருப்பவர் அகிலா ராஜேஸ்வரி. அவருடன் கலந்துரையாடியபோது தொழில் முனைவோர் அறிய வேண்டிய பல தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

கேள்வி : ஒரு ஆண் தொழில் செய்ய விருப்பப்பட்டால் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் உடனே பச்சைக்கொடி காண்பித்துவிடுகிறார்கள். அதுவே ஒரு பெண்ணாக இருந்தால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கொடுப்பதில்லை. இதுபோன்ற பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள். எதுமாதிரியான ஒத்துழைப்பு கொடுப்பீர்கள்?

பதில் : முதலில் நம்மீது நம்பிக்கை வரவேண்டும். அக்காலப் பெண்களை விட இக்காலப் பெண்கள் மிகவும் தைரியமானவர்கள்தான். நம்மீது நம்பிக்கை வரக்கூடிய வகையில் நடந்து கொண்டு எத்தனையோ பெண்கள் இன்று சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒருதலைமுறைக்கு முன்னால் இருந்த பெண்கள் சந்தித்த சவாலே வேற. இப்ப இருக்கிற பெண்களோட சவால் வேற. எத்தனையோ விசயங்களில் போராடி பெண்கள் முன்னுக்கு வரவேண்டும் என்கிற மனதைரியம் பெண்களுக்கு வேண்டும் என்று நிச்சயமாக சொல்வேன். எதுவுமே அவ்வளவு ஈசியாகக் கிடைத்துவிடாது. போராடவேண்டும். பணம் இல்லாததால்தான் என்னால் தொழில் தொடங்க முடியவில்லை என்று சொல்வது பொிய அளவில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஐடியா எப்படிப்பட்டது என்பது முக்கியம். அந்த ஐடியாவுக்கு மக்கள் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களா? சிறு  அளவில் தொழில் ஆரம்பிக்கலாம். பொிய அளவில் ஆரம்பிக்கத்தான் பொிதாக முதலீடு தேவைப்படும். வங்கிகளில் எல்லாம் பெண்களுக்கு என்று ஸ்பெஷல் லோன் எல்லாம் தருகிறார்கள். தமிழக அரசாங்கத்திலேயே நீட்ஸ் என்கிற ஒரு ஸ்கீம் இருக்கிறது. New Entrepreneur Cum Enterprise Development Scheme (NEEDS) முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டும். பெண்கள் அமைப்புக்கு அரசாங்கம் நிறைய உதவிகள் செய்கிற ஸ்கீம் எல்லாம் உள்ளது. விடாமுயற்சியும், நம்மால் சாதிக்க முடியும் என்கிற அந்த தன்னம்பிக்கையும்தான் முக்கியம். பணம் இல்லை என்பதை ஒரு காரணமாக வைக்காமல், அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை நாம் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். யாரும் கையில் வந்து கொடுக்கமாட்டார்கள். நாம்தான் அதைத் தேடிச் செல்ல வேண்டும்

கேள்விதொழில்முனைவோராக உருவாக உலக அளவில்  பெண்கள் அதிக ஆர்வமாக இருக்கிறார்களா? அல்லது நம் நாட்டிலா?

பதில் : இப்போதுதான் பெண்கள் மெல்ல, மெல்ல வெளியில் வர ஆரம்பித்திருக்கிறார்கள். தொழில் துவங்க பெண்களுக்கு நம்நாட்டில் மட்டும் பொிய சவால் என்று எண்ணிவிட முடியாது. பெரும்பாலும் எல்லா நாட்டிலும் இதே நிலைமைதான்இதை ஏன் நான் உறுதியாகச் சொல்கிறேன் என்றால், நாங்கள் கடந்த ஆண்டு உலக அளவில் டை உமன் என்று ஒன்றை ஆரம்பித்தோம். அதாவது women Organization பிரமோட் பண்ண வேண்டும் என்று ‘TIE WOMEN’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினோம். சுமார் அறுபது, எழுபது பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து, one man one mentoring கொடுத்து அதன்பிறகு அவர்களை ஒரு போட்டியில் பங்கெடுக்க வைத்து அதில் இருந்து ஒருவரையோ, மூன்று ரன்னரையோ தேர்வு செய்வது. எம்ப்பவர் என்று ஒரு புரோகிராம் அவர்களுக்கு இருக்கிறது. அதில் பங்கெடுத்துக்கொண்டு இருப்பார்கள். வின்னர் துபாய்  சென்று இன்டர்நேஷனல் ஆடியன்சுக்கு டிப்ஸ் பண்ணப் போகிறார்கள். Women organization அமைப்புக்கு சின்ன சவால் இருக்கத்தான் செய்கிறது. எல்லா தொழில்முனைவோருக்குமே நிச்சயமாக சவால் உண்டு. அதேபோல் பெண் தொழில்முனைவோருக்கான சவால் என்பது கொஞ்சம் வித்தியாசமானது. அதை எப்படிக் கையாள்வது, வேலை முறையை எப்படி சரிசெய்வது என்று சென்னை டை பவுண்டேஷனில் பயிற்சியளிக்கிறோம்

கேள்வி : தொழில் செய்ய கடன் என்று சென்றாலே பெரும்பாலும் செக்யூரிட்டி கேட்கிறார்கள். செக்யூரிட்டி இல்லாமல் லோன் வாங்க முடியுமா

பதில் : சில திட்டங்களில் செக்யூரிட்டி கேட்கிறார்கள். ஆனால், எல்லாவற்றிலும் அப்படியல்லநாம் உட்கார்ந்துகொண்டு இருக்கிற இடத்திலேயே உதவிகள் கிடைக்கும் என்று எண்ணுவது தவறு. முதலில் நமக்கு எந்தமாதிரியான உதவிகள் தேவை; நாம் யாரிடமும் கேட்காமலும், சொல்லாமலும் இருந்தால் நமக்கு யார் உதவிசெய்ய வருவார்கள். அதனால்தான், நாம்தான் போய் தேட வேண்டும். விடாமுயற்சியும், நம்மால் முடியும் என்கிற தன்னம்பிக்கையும் மிகமிக முக்கியம். எல்லோருக்கும் இது கண்டிப்பாகத் தேவை. ஆனால், பெண் தொழில்முனைவோர் ஒருசில நேரங்களில் நம்மால்  முடியாது, நமக்கு அதிர்ஷ்டம் இல்லை எனக்கருதி ரொம்ப ஈசியாக அதை விட்டுவிடுகிறார்கள்சிலநேரங்களில் தன்மேலேயே நம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறார்கள். தொழிலைப் பொருத்தவரையில் ஆண், பெண் என்கிற பேதம் இருக்காது. பெண் என்பதால் எல்லோரும் வந்து பிசினஸ் கொடுக்க மாட்டார்கள். நம்மிடம் திறமை இருக்கிறதா அல்லது நம்முடைய சர்வீசோ, புராடக்டோ அவர்களுக்கு உபயோகப்படுகிற மாதிரி இருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள். இப்படி இருக்கும்போது நம்முடைய திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாகக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். பெண்களைப் பொருத்தவரையில் தன்னைத்தானே அப்டேட் செய்துகொள்வதில்லை. ஐன்ஸ்டீன் சொல்லும்போது, செய்கிற வேலையைத் திரும்பத் திரும்பச் செய்துவிட்டு அதன் பயன் மட்டும் வேற மாதிரி எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம் என்பாராம். அதுபோலநாம் ஒரே வேலையைச் செய்துவிட்டு அதன் விளைவுகள் மட்டும் அபரிமிதமாக இருக்க வேண்டும் என்று பார்ப்பது தவறு. அதனால் மாறிக்கொண்டே வருகின்ற தொழில் சூழல், குறிப்பாக இப்போது கோவிட்டுக்கு அப்புறமாகத் தொழில் செய்கிற முறையே மாறிவிட்டது. இதுபோன்று இருக்கின்ற சூழலில்  ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்

கேள்விகொரோனா கால கட்டத்தில் தொழில் நஷ்டம் அடைந்துவிட்டது என்று எண்ணுகின்ற பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில் : எங்களுடைய பிரசிடெண்ட் சி.கே.ரங்கநாதன் கூறும்போது  “தொழில்கள் தோல்வி அடைவதில்லை. தொழில் செய்பவர்கள் தோல்வி அடைவதால்தான் தொழில்கள் தோல்வி அடைகிறதுஎன்பார். கொரோனாவுக்கு முன்னால் டை சென்னை வந்துடை கேட்டலிஸ்ட்என்று ஒரு புரோகிராமை அறிமுகம் செய்து வைத்தோம். (personal camp information) சுய முன்னேற்றத்திற்காகவே தொடங்கப்பட்ட ஒரு திட்டம். சுய முன்னேற்றத்தினால்தான் தொழில் முன்னேற்றம் ஏற்படும். மாறிக்கொண்டே வருகின்ற உலகத்துக்குத் தகுந்தாற்போல் நாமும் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். நோய் பரவல் கால கட்டத்தில்கூட தொழிலை எங்களால் நல்லமுறையில் செய்ய முடியும் என்று நம்பிக்கை வரக்காரணம், எங்களுக்குள்ளே நாங்கள் ஏற்படுத்திக்கொண்ட மாற்றம்தான்.

கேள்வி : பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கை தற்போது எப்படி உள்ளது?

பதில் : டை சென்னையையே எடுத்துக்கொள்வோம். கடந்த ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்னர் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் தொழில்முனைவோர் இருந்தார்கள். இன்று பார்த்தால் தொழில் முனைவோர் உறுப்பினர் எண்ணிக்கை அதிகம். நிறைய பேர் எங்களோடு இணைந்து தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். நாம் எந்த அளவுக்கு எடுத்துச்செல்கிறோம், நம்மை எல்லோரும் ஒதுக்கி வைக்கிறார்கள் என்று நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு வாழ்வதைவிட வாழ்ந்துகாட்டி நம்மை அதற்குத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். பெண்கள் ஏன் உணர்ச்சிவசப்படுகிறார்கள்அதை நாம் ஒரு படிப்பினையாக எடுத்துச்செய்யலாம். நம்மீது ஒரு முத்திரை குத்துகிறார்கள் என்றால் எதற்காக நம்மீது அப்படி செய்கிறார்கள் என்று கேள்வி கேட்கலாம். ஏன் மாற வேண்டும் என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ளலாமே. மாற்றத்தை ஏற்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்று நம்மை நாமே கேட்கலாமே. அதையே ஒரு பாசிடிவ்வாக எடுத்துச்செயல்பட்டால் நம்மால் நிச்சயமாக சாதிக்க முடியும்

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!