day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு உதவி செய்யும் நவீன கேட்ெஜட் – லதா ரகுநாதன்

பெண்களுக்கு உதவி செய்யும் நவீன கேட்ெஜட் – லதா ரகுநாதன்

 

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. அறிவியல் சார்ந்த பல கண்டுபிடிப்புகள் இப்போது பெண்களின் வேலையை எளிது படுத்த, தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள அறிமுகமாகி வருகின்றன. அவற்றில் பெண்களுக்கு மிகவும் உதவக்கூடிய சில கண்டுபிடிப்புகளைப்பற்றிக் கூறுகிறார் சார்டர்ட் அக்கவுண்டன்டும், சிஸ்டமஸ் ஆடிட்டருமான லதா ரகுநாதன்.

  1. ஸ்மார்ட் பில் பாக்ஸ் (Smart pill box)

“நமக்கு மறதி எதில் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் உடல் நலத்திற்கு நேரப்படி எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளைப் போடுவதற்கு மறந்து விட்டால்? அதிலும் பெண்களுக்கு வீட்டு வேலை, ஆபீஸ் வேலை, குழந்தைகள் என்று பல வேலைகளுக்கு நடுவே வயதானவர்களுக்கு நேரப்படி மருந்து கொடுக்கவேண்டும் என்பதை மறந்தால் அதன் விளைவு எல்லா வகையிலும் பயங்கரமாகத்தான் இருக்கும்.இன்னும் ஒரு படி மேலே சென்று பல நேரங்களில் மருந்து தீர்ந்து போவதற்கு முன் வாங்குவதற்கு மறந்துபோய்விடும். இதற்குத் தீர்வு இந்த ‘ஸ்மார்ட் பில் பாக்ஸ்.’ இதன் விலை ரூ.2000. ஆனால் இது ஸ்மார்ட் ஆப் மூலம் செயல்படுவதால், நேரத்திற்கு மருந்து எடுத்துக்கொள்ளாவிட்டால் அல்லது மருந்து தீர்ந்து போகும் நிலையிலிருந் தால் நம் கைப்பேசியுடன் ப்ளூடூத் மூலம் இணைக்கப்படுவதால், அதில் தகவல் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். இன்னும் ஒரு படி முன்னே சென்று இந்த பில் பாக்ஸின் மூலமே கூட மருந்துக்கடையில் மருந்துகளை ஆர்டர் செய்யவும் இயலும்.

  1. சாக்ரெடிஸ்

“பெண்களின் முதல் கவனம் குழந்தைகளின் படிப்பின் மீதுதான். ஆனால் வேலைக்குப்போகும் பெண்களால் வீட்டு வேலையுடன் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது என்பது சக்தியை மீறிய வேலையாகப் போய்விடுகிறது. அதுவும் இரவு பத்து மணிக்கு, தூக்கம் கண்களை அழுத்தும் நேரம், ‘அம்மா நாளைக்கு அசைன்மெண்ட் முடிக்க வேண்டிய கடைசி நாள்’ என்று குழந்தைகள் வரும்போது, தெரிந்த பல விஷயங்கள் கூட மறந்து அம்மாக்கள் முழிக்கவேண்டி உள்ளது. இதற்கென உருவாக்கப்பட்டது இந்த ‘சாக்ரெடிஸ்’ ஆப். இதைக் கூகிள் ப்ளே ஸ்டோர் மூலம் உங்கள் ஸ்மார்ட் கைப்பேசியில் நீங்கள் பதிவிறக்க முடியும். பின் உங்கள் கேள்விகளை இங்கு பதிவு செய்தால், உங்களுடைய தேடுதலுக்கான பதில் ஒரே நொடியில் கைப்பேசியின் திரையில் பளிச்சிடும்.ஆங்கிலம், கணக்கு, அல்ஜீப்ரா, வேதியல், இயற்பியல், வரலாறு, பொருளாதாரம் என்று பல பாடங்கள் இதன் மூலம் கற்றுக்கொள்ள இயலும்.

  1. ஸ்மார்ட் வேர் (Smart Ware)

அதிகமாகச் சமைத்து அதைப் பத்திரமாகப் பாத்திரத்தில் மூடி குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டுப் பின் அதை மறந்து போகிறவரா அல்லது வாங்கிய பொருட்களை உள்ளே அடுக்கி வைத்துவிட்டு என்ன எங்கு எவ்வளவு இருக்கிறது என்பதை அறியாமல் பொருட்களை வீணடிக்கிறவரா? உங்களுக்குக்கு கை கொடுக்கத்தான் இந்த ‘ஸ்மார்ட் வேர்’. இது ஓவி கனெக்ட் என்றும் ஓவி கிளிப் என்றும் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இதைப் பொருட்களின்மீது அல்லது அவை வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களின்மீது சொருகி வைத்து விட்டால், பின் இந்த ஆப்பை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்க வேண்டும். பின் அதை ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட் வேருடன் இணைத்து, பொருட்களைப்பற்றிய தகவல்களை உள் செலுத்த வேண்டும். அதன் அடிப்படையில் இந்தக் கருவியே பொருட்கள் காலாவதியாகும் தேதியைக் கணக்கிட்டு வைத்துக்கொள்ளும். நம் சாலையில் உள்ள  சிக்னலைப் போன்று  இந்தக்கருவி மூன்று நிறங்களை நமக்குக் காட்டும். பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு. எப்போது சிகப்பு நிறம் தட்டுகிறதோ அப்போது பொருட்கள் காலாவதியாகி விட்டதைக் குறிக்கிறது. மேலும், இதில் உள்ளிடப்படும் தகவல்களைக்கொண்டு, எந்தப் பொருள் தீரும் நிலையில் உள்ளது என்பதையும் நமக்குச் செய்தியாக அனுப்பிவிடும். இதன் விலை, மூன்று ஓவி டாக்குகள் கொண்டது ரூபாய்  6000 ஆகும்.

  1. லீங் (LynQ)

இது ஒரு ஒருவரை ஒருவர் இணைக்கும் கருவி. இதன் தேவை கூடத்தில் நம் குழந்தைகள் நம் கைகளை விட்டு விட்டு ஓடிப்போகும் போது தான் சரியாகப் புரியும். அதே போல் தெரியாத ஒரு ஊரில் நாம் திக்கு திசை தெரியாமல் போய் விடுகிறோம் என்றால்  அப்போது நமக்கு வேண்டியவர்களுடன் தொடர்பில் இருக்க, இந்த இணைப்புக் கருவியைக் கைகளில் அணிந்தால் போதுமானது. இதில் உள்ள ஒரு முக்கியமான அம்சம், இந்தக்கருவி WiFi மூலம் செயல் படுவதில்லை. ஆகவே நாம் இருக்கும் இடத்தில் டேடா கனெக்‌ஷன் தேவை இல்லை.இந்தக் கருவியை ஒரே சமயத்தில் 12 நபர்கள் வரை உபயோகிக்கமுடியும். குழந்தைகள் நம்மை விட்டு தனியே போய் விட்டால் இந்தக் கருவியின் மூலம் அவர்கள் இருக்கும் இடம், அதற்கு நாம் செல்ல வேண்டிய பாதை, அது எவ்வளவு தொலைவு என்பதை இந்தக் கருவியின் மூலம் அறிந்து கொள்ள இயலும். இதன் விலை இரண்டு கருவிகளுக்கு ரூ.11000 ஆகும்

  1. கீன் (Keen)

பலருக்குத் தன்னிச்சையாக நகத்தைக் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. சிலருக்குப் புருவத்தைப் பிடுங்கி எடுப்பது, சிலருக்கு முடி கற்றைகளைப் பிடித்து இழுப்பது என்று. இதைப்போல் வேண்டத்தகாத பழக்கங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை நிறுத்த நினைப்போம். ஆனால் நம்மை அறியாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். அவ்வாறான பழக்கங்களிலிருந்து விடுபட உங்களுக்கு இந்த கீன் சாதனம் உதவியாக இருக்கும்.ஃ பிட்  போல் கைகளில் அணிய வேண்டிய சாதனம்.நாம் எந்த செய்கையிலிருந்து விடுபட விரும்புகிறோமோ அந்த செய்கையை நம் உடல் அசைவின்படி இந்தக் கைப்பட்டையில் ஒரு பயிற்சி திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும். இந்த ஆப்பையும் நாம் ப்ளே ஸ்டோரிலிருந்து நம் கைப்பேசியில் பதிவிறக்க வேண்டும். இப்போது கீன் வேலை செய்யத் தயாராகிவிட்டது. ஒரு உத்தேசமாக நகத்தைக் கடிக்கும் பழக்கத்தை நாம் பயிற்சியில் இட்டால், எப்போதெல்லாம் நம் கைகள் வாய்க்கு அருகே செல்கிறதோ, அப்போதெல்லாம் இந்தக்கருவி நம் உடலில் லேசான மின் அதிர்வுகளை உண்டாக்கி நமக்கு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தும் இதன் விலை ரூ.10000 ஆகும்.

  1. ஹாய் மிரர் (Hi Mirror)

அலங்காரம் செய்து முடித்து கண்ணாடியில் சரி பார்த்தபின் வீட்டிலிருந்து கிளம்பும் முன் நாம் முதலில் பார்க்கும் நபரிடம் கேட்கும் கேள்வி ‘என் முகம் சரியாகத்தானே இருக்கிறது?’ இதில் பதில் சொல்பவர் கணவராக இருந்தால் நம் முகத்தைக்கூடப் பார்க்காமல் ‘எல்லாம் சரியாகத்தான் இருக்கு கிளம்பு, அலங்காரத்திற்கு எத்தனை நேரம்’ என்பது தான் பதிலாக இருக்கும். ஆனால் இப்போது நமக்கு உள்ளது உள்ளபடி கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லக்கூடிய ஒரு பொருள் “Hi mirror”. இதன் உபயோகம் நம் தோலின் நிலையை , அதில் ஏற்படும் மாறுதல்களை நமக்கு சுட்டிக்காட்டிவிடும் . உதாரணத்திற்குக் கண்களின் கீழ் கருவளையம், தோலின் மிருதுத்தன்மை, நிறம் என்று அனைத்தையும் ஒரு டெர்மடாலஜிஸ்ட் போல் நமக்குச் சொல்லிவிடும். இதற்கு மேலேயும் சென்று அதை சரி செய்வதற்கான வழிகள் மற்றும் மருந்துகளையும் கூறிவிடும். உங்கள் கை இருப்பில் இருக்கும் ஃபேஸ் க்ரீம் தீர்ந்துபோகப் போவதையும் கூறிவிடும். இந்தக் கண்ணாடியுடன் ஒரு காமரா இணைக்கப்பட்டிருக்கும். அதன் முன்னால் நம் முகத்தைக் காட்டும்போது அதை ஸ்கேன் செய்து அதில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களைக் கூறுகிறது.இதற்கு ஹாய் மிரர் கம்பானியன் செயலியை நாம் பதிவிறக்க வேண்டும். இதன் விலை ரூ.10000.

  1. ஆண்டி குரோப்பிங் ஸ்டாம்ப்

(Anti groping stamp)

பெண்களின் பாதுகாப்பிற்காகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு முத்திரைக்கருவி தான் இந்த anti groping stamp. போக்குவரத்து நெரிசலில் பெண்கள் தினமும்  அனுபவிக்கும் ஒரு வேதனைதான் இந்த இடி மன்னர்களின் உரசல்கள். நம் நாட்டில் இது கிரிமினல் குற்றம். தவிர  வேலைபார்க்கும் இடங்களில் நடைபெற்றால் அதற்கும் தனி தண்டனை உண்டு. ஆனால் இவை இரண்டிலுமே பெண்ணை இழிவுபடுத்தும் நோக்கோடு செய்யப்பட்டது என்பது நிரூபிக்கப்படவேண்டும். இது பாதி நேரங்களில் சாத்தியப்படாமல் போகிறது. இதன் காரணமாக ஜப்பான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த முத்திரை முறை. ரப்பர் ஸ்டாம்ப் போல் இருக்கும் இதைப் பெண்கள் கைகளில் வைத்துக்கொண்டிருக்க வேண்டும். யாராவது கைகள் தவறான நோக்கத்துடன் உடலைத் தீண்டும்போது இந்த ஸ்டாம்பை அந்தக் கைகளில் அழுத்திவிட்ட்டால் போதும். அது முத்திரையைப் பதித்துவிடும். உடனேயே repel groper எனும் ஆப் மூலம் போலீசிற்கான பொத்தானை அமுக்கினால், உடனே நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை கைகளில் உள்ள ‘ஸ்கானர்’ வழியாகப் பார்க்கும்போது இந்த முத்திரை பளிச்சென்று அதன் அல்ட்ரா ஒளியில் வெளியே தெரியும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான ஒரு கேள்வி, அவ்வாறாக நடந்ததற்கான சாட்சி என்ன என்பதுதான். இந்த முத்திரை அவ்வகையில் ஒரு அத்தாட்சியாக இருக்கும். இதன் விலை  1700 ரூபாய் ஆகும்

  1. ஆக்டோ ஃபிட்.(Acto fit)

உடல் ஆரோக்கியம் உடல் எடையை வைத்தே பார்க்கப்படுகிறது. இதற்கான சாட்சி யாகத் தெருவிற்கு இரண்டு ஜிம். இங்கே உடல் ஆரோக்கியம் என்பது உடல் எடை குறைப்பதாக மட்டுமே காணப்பட்டது. இதற்கு முக்கிய தேவையாக வீடுகளிலும் எடைபார்க்கும் இயந்திரம் வாங்கி வைக்கப்பட்டது. ஆனால் எடை அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ மட்டுமே உடல் ஆரோக்கியத்தைக் காட்டக்கூடிய சுட்டிக்காட்டி அல்ல. மற்ற பல அளவுருக்களும் உள்ளன. இவை அனைத்தையும் உள் அடக்கிய ஒரு எடை பார்க்கும் இயந்திரம் இருக்குமேயானால்?

இது 0.2 முதல் 195 கிலோ வரை எடை பார்க்க அமைக்கப்பட்டுள்ள கருவி. இந்த எடைக்கருவி நம் உடல்நிலையின் 14 அளவுருக்களை கணக்கிடுகிறது. அவை BMI (உடல் நிறை குறியீட்டு), BMR (அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம்), உடல் கொழுப்பு, உடல் நீர், எலும்பு நிறை, கொழுப்பு சேராத எடை, தசை அளவு, ப்ரோட்டீன், எலும்பு தசை, தோலடியிலுள்ள கொழுப்பு, உள்ளுறுப்பு கொழுப்பு, வளர்சிதை மாற்றத்தின் வயது, இயற்பியல் மதிப்பீடு ,  உடல் நீர் என்று மேலே கூறப்பட்டுள்ள பல அளவுருக்களை அறிந்துகொள்ள வேண்டிய தேவையை இப்போது நாம் புரிந்துகொண்டுள்ளோம். இவற்றை வீட்டிலிருந்தபடியே நம் கவனிப்பில் இருக்குமேயானால்? இதை நடத்திக் காட்டுகிறது இந்த ஆக்டோ ஃபிட்.

இந்த ஒரு கருவியை, 16 நபர்கள் வரை உபயோகிக்க இயலும். ஆக, குடும்பத்திற்கென ஒரு ஆக்டோஃபிட் வாங்கினால் போதுமானது. இப்படிச் சேகரிக்கப்படும் தகவல்கள் க்ளொடில்  சேமிக்கப்படுவதால், அது அழிந்து போவதில்லை. .குடும்பத்தில் உள்ளவர் ஒவ்வொருவரும் தனி யூசர் ப்ரொபைல் உருவாக்கி வைத்துக் கொள்ளும்போது, அவர் அவருக்கான வரலாறு தனியாகச் சேமிக்கப்படுகிறது.இதன் விலை ரூ.2699.

மேலே கூறி உள்ளவை மிகச்சில புதிய கண்டுபிடிப்புக்களே. வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கக்கூடிய புதிய புரிதல்களும் புதிய கருவிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதனால் லேட்டாக இல்லாமல் லேட்டஸ்ட்டாக இருப்போம்” என்கிறார் லதா ரகுநாதன்.

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!