day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பெண்களுக்குத் தேவை தனி பட்ஜெட் – காமாட்சி

விளிம்பு நிலை பெண்களுக்காக உழைப்பதையே முழுநேர வேலையாகச் செய்துவருகிறார் காமாட்சி. ‘சமூகக் கண்காணிப்பகம் தமிழ்நாடு’ என்கிற அமைப்பில் முதுநிலை ஆய்வாளராக 16 வருடங்களாகச் செயலாற்றிவருகிறார். விளிம்பு நிலை பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில், பாலின பட்ஜெட் குறித்து இவர் தொடர்ந்து கவனப்படுத்திவருகிறார். இந்தப் புது அரசாங்கம் சமூக நலத்துறையை சமூக நலம் மற்றும் பெண்கள் முன்னேற்றம் என்று மாற்றியிருப்பதை வரவேற்பதாகக் குறிப்பிடுகிறார் காமாட்சி. ‘பெண்களின் குரல்’ வாசகர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: சமத்துவம் பற்றி சமூக வலைத்தளங்களில் பலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் கள நிலவரம் என்ன?

பதில்: Equality, Equity இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. Equality என்பது சமத்துவம். எல்லோருக்கும் சம அளவில் பிரித்துக் கொடுப்பது என்று அர்த்தம். Equity என்பது நிகர்நிலை. யாருக்கு அதிகம் தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு ஒரு படி அதிகம்  கொடுப்பது. அதனால் நாங்கள் Equalityயை விட Equity ஐ எதிர்பார்க்கிறோம். கண்டிப்பாக நமது சமுதாயம் நிகர் நிலையில் இல்லை. அதனால், அந்த நிகர்நிலையை நோக்கிப் பயணம் செய்வது எப்படி என்பதுதான் எங்களுடைய தேடல்.

நான் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது பலவற்றைக் கற்றுக்கொண்டேன். நிகர்நிலை இல்லாத சமுதாயத்தை அப்படியே விட்டுவிடக் கூடாது. எந்தத் துறையில் நாம் இருந்தாலும் நிகர்நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும். இதையொட்டி என் பணி இருக்க வேண்டும் என்பதால், நான் ‘சோஷியல் வாட்ச் தமிழ்நாடு’ அமைப்பில் இணைந்தேன். இது மாநில அளவிலான ஆலோசனை மற்றும் ஆய்வுகள் அமைப்பு. தமிழகத்தில் இருக்கக்கூடிய கொள்கைகள்  பற்றி வழக்காடுவதுதான் எங்கள் பணியே. எங்களுடைய மையக் குறிக்கோள் சமூக நிகர்நிலை. இதை அடைய தொடர்ந்து ஆய்வுகள் நடத்திவருகிறோம். இதற்காக கொள்கை தயாரிப்பாளர்கள், சமூக  ஆய்வாளர்கள் எனப் பலருடனும் தொடர்ந்து பேசுகிறோம். இதன்மூலம் சமுதாயத்தில் விளிம்பில் இருக்கும் பெண்கள் நிகர்நிலை அடைய அரசாங்கத் திட்டங்கள் உதவுகின்றன என்பதை உறுதிப்படுத்துகிறோம். சமூகத்தின் விளிம்பு நிலை என்று எடுத்துக்கொண்டால் அதில் மகளிர், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்கள், தலித் என்கிற அனைத்தும் அடங்கும்.  எனவே, இவர்கள் எல்லோரும் நிகர்நிலையை அடை யவேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். இதற்கு வழக்காடுவதை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம். இதன் வழியாக மாறுபட்ட திட்ட அமைப்புகளை அரசாங்கத்திற்கு வெவ்வேறு வழியில் நாங்கள் கொடுத்து வருகிறோம். மக்களுக்கு எந்தத் திட்டத் தேவைகள் இருக்கிறதோ அவற்றை முடிவெடுக்கும் அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்கிறோம்.

எங்களுடைய பெரிய கனவு சமூக நிகர்நிலைக்கான பட்ஜெட். அதை நோக்கித்தான் நாங்கள் பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இந்தச் சமூக நிகர்நிலையை அடைய உதவும் சிறு படிக்கற்கள்தான் ஜென்டர் பட்ஜெட்டிங், பட்டியலின பட்ஜெட்டிங், பழங்குடியின பட்ஜெட்டிங், குழந்தைகள் பட்ஜெட்டிங் போன்றவை.

கேள்வி: ஜென்டர் பட்ஜெட்டிங் என்றால் என்ன? இந்த நிகர்நிலையை அடைய ஜென்டர் பட்ஜெட்டடிங் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?

பதில்:  9ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் Women Component Plan-ஐ  இந்திய அரசு சமர்ப்பித்தது. ஒவ்வொரு அரசாங்கத் துறையிலும் குறைந்தபட்சம் 30 சதவீத பட்ஜெட்டைப் பெண்களுக்காக ஒதுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. நாளடைவில்  பல மாநிலங்களில் உள்ள  பட்ஜெட் அமைப்புகள், ஜென்டர் பட்ஜெட்டையும் விமர்ச்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏனென்றால், சில துறைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் பட்ஜெட் ஒதுக்கப்பட்டது.

சில துறைகளில் பெண்களுக்குக் குறைந்தது 30 சதவீதம்கூட ஒதுக்க முடியவில்லை. அப்பொழுது, திட்டங்களுக்கு எதிராகப் பல கேள்விகள் எழுந்தன. அதனால் 10 ஆண்களுக்குப் பிறகு இது மருவி ஜென்டர் பட்ஜெட்டிங் என்றானது. இதை நமது தமிழக அரசு மகளிருக்கான வரவு – செலவு திட்டம் என்கிறது. ஆனால், இதை ஆரம்பத்தில் பாலின கண்ணோட்டத்தில் பட்ஜெட் என்றுதான் பார்த்தோம். எதுவாக இருந்தாலும் இறுதியாக ஆண் – பெண் நிகர்நிலைக்கான பட்ஜெட் என்பதுதான் பொருள். பொருளாதாரம், சமூக மேம்பாட்டுக்கான குறியீடுகள் என்று எதை எடுத்துக்கொண்டாலும், அவற்றில் பெண்களின் நிலை  என்ன என்பது ஆணுடன் ஒப்பிட்டுப் பார்கையில் நமக்குத் தெரியும். கல்வி, உடல் நலம், அரசியல் என்று சமூகக் குறிகாட்டிகளில் பெண்கள் ஒரு படி கீழே இருக்கின்றனர். எனவே, அதனை மேல்நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். இதற்குக் கண்டிப்பாக ஒரு நல்ல திட்ட வரையறை வேண்டும். அது தமிழகத்தில் இவ்வளவு காலம் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்பொழுது அரசாங்கம் பெண்களுக்கான திட்டங்களை வரையறுத்துக்கொண்டே இருக்கிறது.

ஏட்டளவில் மட்டும் பெண்களுக்கான திட்டங் கள் இருக்கின்றன என்றில்லாமல் பழங்குடியினப் பெண்கள், கூலித்தொழிலாளியாக இருக்கும் பெண்கள் என்று ஒவ்வொரு  வர்க்கத்திலும் நலிந்த பிரிவினராய் இருக்கும் பெண்கள் அவர்களுடைய அடித்தட்டு நிலைமையை உயர்த்த எவ்வாறு கைகொடுத்துத் தூக்கப்போகிறோம் என்கிற கேள்விக்கு ஜென்டர் பட்ஜெட் தீர்வாக இருக்கும். இந்தக் கண்ணோட்டத்தில்தான் இந்த வழிமுறையைப் பல நாடுகளில் பின்பற்ற ஆரம்பித்தனர். எனவே, இந்த ஜென்டர் பட்ஜெட் முறையை ஒரு நுழைவு வாயிலாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.  இது வெறும் பட்ஜெட் சார்ந்தது இல்லை. சட்டங்கள், திட்டங்கள், கொள்கைகள் எந்த அளவிற்குப் பெண்களுக்குப் பணம் ஒதுக்குகின்றனர், அதை எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்துகின்றனர் என்பதையும் உள்ளடக் கியது. மகளிருக்கு என்று ஒரு திட்டம் ஆரம்பிக்கும்பொழுது, அது உண்மையில் பெண்களை முன்னேற்றமடையச் செய்கிறதா இல்லையா என்று அந்தத் திட்டத்தின் தாக்கத்தை ஆராய்வதுவரை அனைத்தும் இதில் அடங்கும். எனவே, ஜென்டர் பட்ஜெட்டிங் என்பதை வெறும் வரவு , செலவு கணக்காக மட்டும் பார்க்காமல், துறைரீதியாக என்னென்ன பாகுபாடுகள் இருக்கின்றன என்று பார்க்க வேண்டியுள்ளது.

கேள்வி: ஜென்டர் பட்ஜெட்டிங் என்பது பார்க்கும்போது, அதில் ஆண், பெண் ஆகிய இரு பாலினத்தை  மட்டுமே உள்ளடக்கியதா? அல்லது  LGBTQ+ என்ற அனைத்துப் பாலினமும் அடங்குமா?

பதில்:  நிச்சயமாக ஜென்டர் பட்ஜெட்டிங் எல்லாப் பாலினத்தவரையும் உள்ளடக்க வேண்டும். நமது திட்டத்திற்கான பெயரை மகளிருக்கான வரவு செலவுத் திட்டம் என்றில்லாமல் எந்தப் பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு அதிகமான தேவை இருக்கிறதோ அவர்களை உயர்த்தும் வகையில் அமைய வேண்டும். வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கே ஜென்டர் பட்ஜெட்டிங் உதவ வேண்டும். அதன்பின் சாதிரீதியாகப் பார்த்தால் ஒடுக்கப்பட்டோர், பட்டியலினப் பெண்களுக்கு உதவ வேண்டும். குடியிருக்கும் இடத்தை வைத்துப் பார்க்கும்போது, கிராமப்புறங்களில் இருக்கும் மகளிருக்கு உதவ வேண்டும். அதேபோல், உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ வேண்டும்.

மதரீதியாகச் சிறுபான்மையினப் பெண் களுக்கும் உரிமைகள் கிடைக்க வேண்டும். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கூலித் தொழிலாளி, முதியவர்கள், திருநங்கைகள் என்று எந்த அளவுக்கு இந்த ஜென்டர் பட்ஜெட்டிங் செயல்பாட்டைப் பிரித்துப் பார்க்கிறோமோ அது வெகு விரைவில் பலன் அளிக்கும். அதுமட்டுமின்றி, முதலில் யார் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறார்களோ, அவர்களை முன்நிறுத்த வேண்டும். ஒரு பெண் பட்டியலினத்தவராகவும் இருந்து, மாற்றுத்திறனாளியாகவும் இருக்கிறார் என்றால், அவருக்கே  நாம் முக்கியத்து வம் அளிக்க வேண்டும். ஜெண்டர் பட்ஜெட்டிங் என்பது அனைவரையும் சேர்த்து முன்னேற்றுவதுதான்.

கேள்வி: நிகர்நிலையை நிலைநாட்ட உங்கள் அமைப்பு எந்த அளவுக்கு முயற்சி எடுத்துள்ளது?

பதில்: ஜென்டர் பட்ஜெட்டிங்கை நடைமுறைப் படுத்த முதன் முதலில் 200ஆம் ஆண்டு நாங்கள் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தோம்.  Towards Gender Budgeting in Tamil Nadu என்கிற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டோம்.  இதில் ஒவ்வொரு துறையும், மகளிருக்கென்று ஒதுக்கப்பட்ட 30 சதவீதம், சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்கிற கேள்விக்கான பதிலை ஒரு ஆய்வறிக்கையாகச் சமர்பித்தோம். அந்த ஆய்வறிக்கையின்படி, பல துறைகள் பெண்களுக்கென எதையும் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்தது. கிட்டத்தட்ட 17 துறைகளில் வெறும் ஆறு துறைகள்தான் பெண்களுக்கான திட்டங்களைச் சரியாக நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

இந்த மகளிருக்கான திட்டங்களில் ஐந்து சதவீதம்கூட அவர்கள் அடையவில்லை. இந்த ஆய்வறிக்கையை  தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் ராமாத்தாளிடம் சமர்ப்பித்தபொழுது, அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். பின்பு மகளிருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று, அனைத்துச் செயலாளர்களையும் அழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.  அந்தக் கூட்டத்தில் டெல்லியில் உள்ள ஒரு பட்ஜெட் ஆலோசனை நிறுவனத்தினரும் கலந்துகொண்டனர். அந்த நிறுவனத்தினர் தேசிய அளவிலான பட்ஜெட் குறித்த ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.

‘2008இல் மகளிருக்கான  திட்டத்தில் மகளிர் ஆணையத்தோடு இணைந்து ஜென்டர் பட்ஜெட்டுக்காக ஒரு திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். கூடிய விரைவில் ஒரு கமிட்டி உருவாக்கப்படும்’ என்று அப்போது அரசாங்கம் குறிப்பிட்டது. இதனை நாங்கள் தனியாகச் செய்யவில்லை. எங்களுடன், பெண் சமூக ஆர்வலர்கள் பலர் 20 வருடங்களாகக் களத்தில் இறங்கிப் பாடுபட்டனர். ஆனால், அது அறிக்கையாக இருந்ததே தவிர நடைமுறைப்படுத்தவில்லை. இது பெண்களுக்கானதாக இருப்பதால் ஜென்டர் பட்ஜெட்டுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இவ்வளவு பெண்கள் வாழ்க்கையில் முன்னேறியதால்தான் இங்கே பல நிருபர்கள், செயலாளர்கள் அதிகாரிகளாக இருக்கும்போது எதற்குத் தனியாக பட்ஜெட் என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சொல்லப்பட்டது.

ஜெண்டர் பட்ஜெட்டிங் மகளிருக்கானதாக மட்டும் இருந்தால் போதாது.  அப்பொழுதுான் நாங்கள் Inter Sexnality concept-ஐ அறிமுகப்படுத்தினோம். டெல்லியில் உள்ள  United Nation Women south Asia உடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டோம். அந்த ஆய்வில்  இரட்டைப் புறக்கணிப்புக்கு ஆளாகும் பட்டியலினப் பெண்களைப் பற்றிக் கூறியிருந்தோம். ஜென்டர் படஜெட்டிங்கில் சாதியே கிடையாது என்பதால்  இதுபோன்ற துணைத் திட்டங்கள் உண்டு. அதில் பெண்ணியப்  பார்வையே கிடையாது. இவை இரண்டிலும் புறக்கணிக்கப்படும் பெண்களை உயர்த்தவே இரட்டைப்புறக்கணிப்புக்கு ஆளாகும் பட்டியலினப் பெண்கள் என்கிற ஆவணத்தைச் சமர்ப்பித்தோம். பல எம்.எல்.ஏ., எம்.பி.க்களுடன் உரையாடல் மேற்கொண்டோம். 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு திட்டக் குழு சார்பில் மீண்டும் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் அதை வரவேற்றனர். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த னர்.

கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் ஜென்டர் பட்ஜெட்டை 2004-லேயே அமல்படுத்திவிட்டனர். ஆனால், இங்கோ 2008இல் இருந்து நாங்கள் போராடி வருகிறோம். ஆனால்,  இன்னும் அமல்படுத்தவில்லை என்பதைச் சொன்னோம். அதன் தாக்கமாக 2018இல் முதல்முறை ஜென்டர் பட்ஜெட் அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கான பிரிவை வருவாய்த் துறைக்குக் கீழ் அமைத்துக் கொடுத்தனர். 2018இல் இருந்து வருடா வருடம் ஜென்டர் பட்ஜெட் அறிக்கை வெளியிடப்படுகிறது. நாங்கள் அரசாங்கத்தினரிடம் மட்டும் பணிபுரியாமல், பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணிபுரிகிறோம். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று இந்த ஜென்டர் பட்ஜெட் குறித்துப்  பயிற்சி அளித்து வருகிறோம். புதிதாக நியமிக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். ஜென்டர் பட்ஜெட் வழியாக கேரளா முன்னேறி வருவதுபோலவே தமிழ்நாடும் வெகுவிரைவில் முன்னேறும் என்று நம்புகிறோம்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!