day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பெண்களின் ஆரோக்கியத்தை பேணும் மல்லி

பெண்களின் ஆரோக்கியத்தை பேணும் மல்லி

ஆச்சரியம், ஆனால் உண்மை. எந்த வயது ஆனாலும் மல்லியை மட்டும் பெண்கள் உணவில் சற்று அதிகமாக சேர்த்து வந்தால் ஆரோக்கியம் நூறு வயதானாலும் பேணப்படும்.
மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லிதான் பெண்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் அருமருந்து என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்த மல்லி விதையில் பெண்களின் ஆரோக்கியத்தை பேணி காக்கக்கூடிய சத்துக்களான இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, போலிக் அமிலம், நியாசின் நிறைந்துள்ளது.
வெள்ளைப்படுதல் பிரச்சினையில் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பெண்கள் இரவு முழுவதும் கொத்தமல்லிவிதையை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை வடித்து அந்த நீரைத் தொடர்ந்து ஒரு வாரம் முதல் 48 நாட்கள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுதலை அடையலாம்.
இதே நீரை 35 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு ஏற்படும் கால்சிய பற்றாக்குறையை ஈடுகட்ட அருந்தி வரும்போது எலும்புகளில் ஏற்படும் தேய்மானம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோயைத் தடுக்கக் கூடிய ஆற்றல் கொத்தமல்லிக்கு உண்டு.
மாதவிடாய் சுழற்சி சீராக இல்லாமலிருக்கும் பெண்கள் இதே 10 கி. கொத்தமல்லி விதைகளை 50 மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து பருகிவர உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சீராக்கப்பட்டு மாதவிடாய் சுழற்சி சீராக ஏற்பட உதவும்.
கொத்தமல்லி விதைகளில் உள்ள சினோலி மற்றும் லினோலியிக் அமிலம் உள்ளதால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் வலி அலர்ஜியை தடுக்க பெண்களுக்கு உதவும். அதே போல் ரத்தசோகையைத் தடுத்து நிறுத்தக் கூடிய ஆற்றல் இந்த மல்லி நீருக்கு உண்டு.
மேலும் கொத்தமல்லியில் உள்ள போர்னியோல் மற்றும் லினாலோல் போன்ற வேதிப்பொருட்கள் செரிமானத்தைத் தூண்டி அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் பாக்டீரியாக்களை அழித்து வயிற்றுப் போக்கையும் தடுத்து நிறுத்தக் கூடிய ஆற்றல் பெற்றது.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள கொத்தமல்லி உதவுவதோடு கெட்ட கொலஸ்ட்ராலை அழித்து உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் தங்க வைக்கக் கூடிய பண்பு மல்லிக்கு உள்ளது. எனவே பெண்கள் தாராளமாக உங்கள் சமையலில் மல்லியை பயன்படுத்தினால் பெண்களின் ஆரோக்கியம் பெரிய அளவில் பேணப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

-டாக்டர்.வே.இரா.பிருந்தா

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!